Latest Updates
-
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும்
கோவக்காய் வாங்குனா இந்த மாதிரி ஹோட்டல் ஸ்டைலில் பொரியல் பண்ணுங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும்
Hotel Style Kovakkai Poriyal Recipe in Tamil: உங்கள் வீட்டில் மதியம் சாப்பாட்டுக்கு தினமும் பொரியல் செய்வீர்களா? சில காய்கறிகளில் பொரியல் செய்தால் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் வேண்டாம் என்பார்களா? முக்கியமாக கோவக்காய் என்றால் வேண்டாம் என்று கூறுவார்களா? அப்படிப்பட்டவர்களை கோவக்காய் சாப்பிட வைக்க வேண்டுமா? அப்படியானால் அந்த கோவக்காயைக் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் பொரியல் செய்து கொடுங்கள். ஏனெனில் கோவக்காயில் பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன, இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

கோவக்காய் பொரியலை இதுபோல ஹோட்டலில் ஸ்டைலில் செய்து கொடுத்தால் கோவக்காய் பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ஈஸியான கோவக்காய் பொரியலை பேச்சுலர்கள் கூட செய்து சாப்பிடலாம். அந்த அளவில் செய்வதற்கு ஈஸியாக இருக்கும். அதே சமயம் சுவையாகவும் இருக்கும். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் மற்றும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த விரும்புபவர்கள் நிச்சயம் இந்த புடலங்காய் பொரியலை சாப்பிட வேண்டும்.
உங்களுக்கு சுவையான மற்றும் ஆரோக்கியமான கோவக்காய் பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் கோவக்காய் பொரியலின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- கோவக்காய் - கால் கிலோ
- பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
- பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கியது)
- கறிவேப்பிலை - சிறிதளவு
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- சர்க்கரை - 1/4 டீஸ்பூன்
- சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
- எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
தாளிக்க:
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
- சோம்பு - 1/2 ஸ்பூன்
செய்முறை:
- கோவக்காயை நன்றாகக் கழுவி, நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். அதைத் தனியாக எடுத்து வைக்கவும்.
- வெங்காயம் மற்றும் பூண்டை கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெயைச் சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் சோம்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
- நறுக்கிய வெங்காயம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய கோவக்காய், மஞ்சள் தூள் மற்றும் சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்து, மிதமான தீயில் 5 நிமிடங்கள் வதக்கவும்.
- பின் அடுப்பை மிதமான தீயில் வைத்து, சாம்பார் பொடி, கரம் மசாலா பொடி மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- மசாலா கோவக்காயில் நன்றாக படியும் வகையில் குறைந்த தீயில் 2 முதல் 3 நிமிடங்கள் நன்றாக கிளறி விடவும். பிறகு சிறிது தண்ணீர் தெளித்து, கோவக்காய் மென்மையாக வேகும் வரை குறைந்த தீயில் மூடி வைத்துச் சமைக்கவும்.
- கோவக்காய் வெந்து நன்கு சுருள வந்ததும் சிறிதுளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறி அடுப்பை அணைத்தால் சுவையான ஹோட்டல் ஸ்டைல் கோவக்காய் பொரியல் ரெடி.
கோவக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
இரத்தச் சர்க்கரை அளவைச் சீராக்குகிறது: கோவக்காயில் குறைந்த கிளைசெமிக் குறியீடு மற்றும் சக்திவாய்ந்த சேர்மங்கள், இரத்த ஓட்டத்தில் சர்க்கரை உறிஞ்சப்படும் வேகத்தைக் குறைக்க உதவுகின்றன.
செரிமானத்தை ஊக்குவிக்கிறது: அதிக நார்ச்சத்து கொண்ட கோவக்காய், சீரான குடல் இயக்கத்தை ஊக்குவிப்பதுடன், மலச்சிக்கலைத் தடுத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- எடை குறைப்பு: குறைந்த கலோரி மற்றும் அதிக அளவு நார்ச்சத்து கொண்டிருப்பதால், இது நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக உணர வைத்து, அளவுக்கு அதிகமாக உண்பதைத் தடுப்பதன் மூலம் எடையைக் குறைக்க உதவுகிறது.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இது, உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.



Click it and Unblock the Notifications