Latest Updates
-
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்..
இட்லி, தோசைக்கு அடுத்தமுறை இப்படி சாம்பார் வையுங்க... சும்மா அள்ளும்...
Hotel Style Idli Sambar Recipe: எப்போதும் இட்லி, தோசைக்கு ஒரே ஸ்டைலில் சாம்பார் செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் அடுத்தமுறை ஹோட்டல் ஸ்டைலில் இட்லி சாம்பாரை செய்யுங்கள். இந்த இட்லி சாம்பார் இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, பொங்கல், சாதம் போன்றவற்றுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
உங்களுக்கு ஹோட்டல் ஸ்டைல் இட்லி சாம்பார் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் இட்லி சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
பருப்பு வேக வைப்பதற்கு...
* துவரம் பருப்பு - 1/4 கப்
* மாசூர் பருப்பு - 1/4 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 1/2 கப்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெருஙங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
காய்கறிகள்...
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 3 (நறுக்கியது)
* முருங்கைக்காய் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
* கேரட் - 1 (நீள துண்டுகளாக்கப்பட்டது)
* பீன்ஸ் - 6-7 (துண்டுகளாக்கப்பட்டது)
* உருளைக்கிழங்கு - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
* வெண்டைக்காய் - 4-5 (துண்டுகளாக்கப்பட்டது)
* கத்திரிக்காய் - 6-7 (நறுக்கியது)
* தண்ணீர் - 1 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
புளி சாற்றிற்கு...
* புளி - 1 எலுமிச்சை அளவு
* சுடுநீர் - 1/4 கப்
சாம்பார் பொடிக்கு...
* காஷ்மீரி வர மிளகாய் - 5
* கறிவேப்பிலை - சிறிது
* மல்லி விதைகள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
பிற பொருட்கள்...
* தண்ணீர் - 1 கப்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் பருப்புகளை நன்கு நீரில் கழுவி, குக்கரில் போட்டு, 1 1/2
கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து, அடுப்பில் வைத்து, 7-8
விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை நன்கு மசித்து விட
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சாம்பார் பொடி
செய்வதற்கு கொடுத்துள்ள அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து
தாளித்த பின், மல்லி, சீரகம், மிளகு, கடலைப் பருப்பு, வெந்தயம்,
கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து குறைவான தீயில் வைத்து, பொன்னிறமாக
வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி
செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு புளியை வெதுவெதுப்பான நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, அதை
பிசைந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு
கொடுத்துள்ள அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் வெங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து 2 நிமிடம்
நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து தக்காளியை சேர்த்து சுவைக்கேற்ப உப்பு தூவி 4-5 நிமிடம்
மிதமான தீயில் வைத்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் காய்கறிகளை சேர்த்து வதக்கி, 4- நிமிடம் மிதமான தீயில்
வேக வைக்க வேண்டும்.
* பின் புளிச்சாற்றினை ஊற்றி, அதைத் தொடர்ந்து 1- 1 1/4 கப் நீரை
ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்க
வைக்க வேண்டும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி, அத்துடன் மசித்து
வைத்துள்ள பருப்பையும், தேவையான அளவு நீரையும் ஊற்றி, சுவை பார்த்து,
வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி, மிதமான தீயில் 6-7 மிடம் கொதிக்க
வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான ஹோட்டல் ஸ்டைல்
இட்லி சாம்பார் தயார்.
Image Courtesy: vegrecipesofindia



Click it and Unblock the Notifications











