Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
ஹோட்டலில் சன்னா மசாலா டேஸ்ட்டாக இருப்பதன் ரகசியம் இதுதாங்க.. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க...
Hotel Channa Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் இரவு நேரத்தில் பெரும்பாலும் சப்பாத்தி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு சற்று ஸ்பெஷலான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் சன்னா மசாலாவை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா?
அப்படியானால் நீங்கள் வழக்கமாக செய்வது போன்று சன்னா மசாலாவை செய்யாமல், ஹோட்டல் சுவையில் சன்னா மசாலாவை செய்யுங்கள். இப்படி க்ரீமியாக சன்னா மசாலாவை செய்யும் போது வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு ஹோட்டல் சுவையில் சன்னா மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் சன்னா மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கொண்டைக்கடலை - 3/4 கப் (6 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்)
* உப்பு - சிறிது
* தண்ணீர் - தேவையான அளவு
மசாலாவிற்கு...
* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* உப்பு - சிறிது
* பச்சை மிளகாய் - 2
* தக்காளி - 2 (நறுக்கியது)
* முந்திரி - 10
* கசூரி மெத்திரி - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
கிரேவிக்கு...
* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 4
* ஏலக்காய் - 2
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சிக்கன் மசாலா - 2 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* சுடுதண்ணீர் - 3 1/2 கப்
* சர்க்கரை - 3/4 டீஸ்பூன்
* காய்ச்சிய பால் - 3/4 கப்
* வெண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் 6 மணிநேரம் நீரில் ஊற வைத்த கொண்டைக்கடலையை கழுவி,
குக்கரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் கொண்டைக்கடலை மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, சிறிது உப்பு
சேர்த்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 4-5 விசில் விட்டு இறக்கிக்
கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், நறுக்கிய வெங்காயம் மற்றும் சிறிது உப்பு சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளி, முந்திரி, கசூரி மெத்தி, சோம்பு சேர்த்து,
தக்காளி மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து குறைவான தீயில் வைத்து
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சிக்கன் மசாலா சேர்த்து
வதக்கி, அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து, நன்கு பச்சை வாசனை
போக வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் சிறிது நீரை ஊற்றி கிளறி, கரம் மசாலாவை சேர்த்து
நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கிரேவிக்கு தேவையான அளவு சுடுநீரை ஊற்றி கிளறி, வேக
வைத்துள்ள கொண்டைக்கடலையை நீருடன் அப்படியே ஊற்றி கிளறி, மூடி வைத்து
10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் சர்க்கரை சேர்த்து கிளறி, உப்பு சுவை பார்த்து
வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி, கொதிக்க வைத்து, பின் காய்ச்சிய
பாலை ஊற்றி கிளறி, 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு கரண்டியில் வெண்ணெயை உருக வைத்து, அதில் மிளகாய் தூளை
சேர்த்து, பின் அதை கொதித்துக் கொண்டிருக்கும் கிரேவியுடன் சேர்த்து
கிளறி இறக்கினால், சுவையான கொண்டைக்கடலை கிரேவி அல்லது சன்னா மசாலா
தயார்.



Click it and Unblock the Notifications
