Latest Updates
-
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...!
1 கப் சுண்டல் இருந்தால் போதும்... அட்டகாசமான மற்றும் ஆரோக்கியமான ஸ்னாக் செஞ்சு அசத்தலாம்...!
Chana Cutlet Recipe in Tamil: தினமும் பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு என்ன செய்து கொடுப்பது என்பது பெரும்பாலான அம்மாக்களுக்கு இருக்கும் பெரிய கவலையாகும். இதில் மிகவும் முக்கியமானது அப்படி குழந்தைகளுக்கு செய்து கொடுப்பது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஸ்னாக் செய்ய வேண்டுமென்று விரும்புபவர்கள் இந்த சுண்டல் கட்லெட்டை செய்யலாம். இந்த சுண்டல் கட்லெட் செய்வதற்கு எளிதாக இருப்பதுடன் ஆரோக்கியமானதாகவும், சுவையானதாகவும் இருக்கும். மொறுமொறுவென ஆரோக்கியமான சுண்டல் கட்லெட் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- வெள்ளை சுண்டல் - ஒரு கப்
- பெரிய வெங்காயம் - 2
- இஞ்சி - சிறியது (2 இன்ச் அளவு)
- பூண்டு - 10 அல்லது 12 பல்
- சன்னா மசாலா - 3 டீ ஸ்பூன்,
- கரம் மசாலா - ½ டீ ஸ்பூன்,
- மிளகாய்த்தூள் - சிறிதளவு (காரத்திற்கு ஏற்ப)
- மஞ்சள்தூள் - ¼ டீ ஸ்பூன்
- மிளகு தூள் - ½ டீ ஸ்பூன்
- சோம்பு தூள் - ½ டீ ஸ்பூன்
- சீரகத்தூள் - ¼ டீ ஸ்பூன்
- உருளைக்கிழங்கு - 2 (சிறியது)
- பிரெட் தூள் - சிறிதளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- வெள்ளை சுண்டலை குறைந்தது 4 அல்லது 5 மணி நேரதிற்கு ஊற வைத்து கொள்ளவும். அந்த நேரத்தை விட அதிகம் ஊறினால் பிரச்சனை இல்லை.
- பெரிய வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து கொள்ளவும்.
- பெரிய வெங்காயத்தின் மேற்பரப்பில் கருப்பு நிற பூஞ்சை இருந்தால் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
- பின் பெரிய வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- இஞ்சியை மண் இல்லாமல் அலசி தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- தோல் உரித்த பூண்டு மற்றும் நறுக்கிய இஞ்சியை மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
- உருளை கிழங்கை மண் இல்லாமல் அலசி குக்கரில் சேர்க்கவும்.
- அதில் ஊற வைத்த சுண்டலையும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்து ஆற வைக்கவும்.
- பின் உருளைக்கிழங்கின் தோலை நீக்கி விட்டு நன்றாக மசித்து கொள்ளவும்.
- வேக வைத்த சுண்டலை மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து அரைத்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.
- அரைத்து வைத்த இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கி கொள்ளவும்.
- அதனுடன் சன்னா மசாலா, கரம் மசாலா, மஞ்சள்தூள், தனி மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகு தூள், சோம்பு தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறவும்.
- அதில் மசித்து வைத்த உருளைக்கிழங்கு மற்றும் சன்னாவோடு சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும்.
- பின் அதை கட்லெட் வடிவில் தட்டி, பிரெட் தூளில் புரட்டி எடுத்து வைக்கவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காய விடவும்.
- எண்ணெய் காய்ந்ததும் தட்டி வைத்தவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுத்தால் சுவையான சுண்டல் கட்லெட் ரெடி!



Click it and Unblock the Notifications




