Latest Updates
-
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சத்தான பீர்க்கங்காய் சாதம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது!
மதியம் வடித்த சாதம் இருக்கா? அப்ப அத வெச்சு ஈவ்னிங் இத செஞ்சு குடிங்க.. செம டேஸ்ட்டா இருக்கும்..
Healthy Rice Milk Recipe In Tamil: மாலை வேளையில் எப்போதும் காபி, டீ தான் குடிப்பீர்களா? இப்படி காபி, டீ குடித்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் மதியம் சமைத்த சாதம் 1/2 கப் இருக்கா? அப்படியானால் அத்துடன் பால் சேர்த்து அருமையான சுவையில் ஒரு பானத்தை செய்து குடியுங்கள். இந்த பானம் குழந்தைகளும் விரும்பி குடிக்குமாறு இருக்கும்.
மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் குழந்தைக்கு இந்த பானத்தை செய்து கொடுத்தால், அவர்களின் வயிறும் நிரம்பும், விரும்பியும் குடிப்பார்கள். முக்கியமாக இந்த பானத்தை ஒருமுறை செய்தால், அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள். இந்த பானம் பட்டர்ஸ்காட்ச் சுவையில் இருக்கும்.

உங்களுக்கு இந்த ஹெல்த்தி ட்ரிங்க்கை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அந்த ஹெல்த்தி ட்ரிங்க் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெண்ணெய்/ நெய் - 1 டீஸ்பூன்
* சர்க்கரை - 1/4 கப்
* பால் - 1 1/2 கப்
* சாதம் - 1/2 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* ஏலக்காய் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1
டீஸ்பூன் வெண்ணெய்/நெய் ஊற்றி சூடானதும், அதில் 1/4 கப் சர்க்கரை
சேர்த்து நன்கு கிளறி கிளறி, சர்க்கரையை கரைய வைக்க வேண்டும்.
* சர்க்கரை கரைந்ததும், தீயைக் குறைத்து, பொன்னிறமாகும் வரை கிளறி விட
வேண்டும்.
* பின்பு அதில் 1 1/2 கப் பாலை ஊற்றி, நன்கு கிளறி விட வேண்டும்.
* சர்க்கரையானது பாலில் நன்கு கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும், அதில்
1/2 கப் சாதத்தை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பாலானது ஓரளவு கெட்டியாகத் தொடங்கியதும், அடுப்பை அணைத்துவிட்டு
இறக்கினால், சுவையான ஹெல்த்தி ட்ரிங்க் தயார்.



Click it and Unblock the Notifications