Latest Updates
-
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும்
கோதுமை மாவையும், முட்டையும் வெச்சு ஒருமுறை இந்த காலை உணவை செஞ்சு பாருங்க.. செமயா இருக்கும்..
Healthy Breakfast Recipe In Tamil: காலையில் தினமும் ஒரே மாதிரி இட்லி, தோசை செஞ்சு போரடிச்சுடுச்சா? உங்க குழந்தைகளும் வரவர சாப்பிட மறுக்குறாங்களா? அப்படின்னா இன்னைக்கு காலையில கோதுமை மாவையும், முட்டையையும் வெச்சு ஒரு அருமையான காலை உணவை செய்யுங்கள்.
இந்த காலை உணவு சுவையானது மட்டுமின்றி, ஆரோக்கியமானதும் கூட. ஒருமுறை செய்தால், வீட்டில் உள்ளோர் அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள். முற்றிலும் புதுமையான இந்த காலை உணவு உங்கள் குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு இந்த கோதுமை மாவு முட்டை தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை மாவு முட்டை தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முட்டை - 1
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* பால் - 1 கப்
* கோதுமை மாவு - 3/4 கப்
வெஜிடேபிள் முட்டை கலவைக்கு...
* முட்டை - 2
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் -1 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* சீஸ் - சிறிது (துருவியது)
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் 1 முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் உப்பு
சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 கப் பாலை ஊற்றி, 3/4 கப் கோதுமை மாவு சேர்த்து
கட்டிகளின்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பௌலில் 2 முட்டைகளை உடைத்து ஊற்ற வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், மிளகுத் தூள்,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி
சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு தவாவை அடுப்பில் வைத்து, தவா சூடானதும், ஒரு ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி, பின் அதில் கலந்து வைத்துள்ள கோதுமை மாவை ஊற்றி,
மிதமான தீயில் வைத்து, மாவை பரப்பி விட தவாவை அப்படியே சுழற்றி பரப்பி
விட வேண்டும்.
* 10 நொடிகள் அப்படியே வேக வைக்க வேண்டும்.
* பின் அதன் மேலே முட்டை கலவையை ஒரு கரண்டி ஊற்றி மேலே பரப்பி விட்டு,
5 நொடிகள் வேக வைத்து, பின் திருப்பிப் போட்டு 2 நொடிகள் வேக வைத்து,
பின் மீண்டும் திருப்பி, மேலே சீஸை துருவிப் போட்டு, மூடி வைத்து 2
நொடிகள் வேக வைத்து எடுத்தால், சுவையான கோதுமை மாவு முட்டை தோசை
தயார்.
Image Courtesy: Akshaya. com



Click it and Unblock the Notifications
