Latest Updates
-
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க..
சிக்கனை வாங்கினால் ஒருமுறை இந்த க்ரீன் சிக்கனை ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்..
Hariyali Chicken Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது நாண் செய்யப் போகிறீர்களா? அதற்கு ஒரு அசத்தலான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் இதுவரை நீங்கள் வீட்டில் செய்திராத சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா?
அப்படியானால் ஹரியாலி சிக்கனை செய்யுங்கள். இந்த ஹரியாலி சிக்கன் கிரேவி சப்பாத்தி, நாண் உடன் மட்டுமின்றி பூரியுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். முக்கியமாக இந்த கிரேவி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு ஹரியாலி சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹரியாலி சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 3
* வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* சிக்கன் - 1/2 கிலோ
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 3/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
அரைப்பதற்கு..
* புதினா - 1 கைப்பிடி
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* பச்சை மிளகாய் - 4
* தயிர் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து நீரில் நன்கு கழுவிக்
கொள்ள வேண்டும். அதன் பின் மிக்சர் ஜாரில் புதினா, கொத்தமல்லி, பச்சை
மிளகாய் மற்றும் தயிர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வரும் வரை வதக்கியதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து
பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து, சிக்கனின் நிறம்
மாறும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மல்லித் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், சோம்பு தூள்,
சீரகத் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி
நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள புதினா கலவையை சேர்த்து நன்கு கிளறி
விட்டு, சிறிது நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 20 நிமிடம் சிக்கனை வேக
வைக்க வேண்டும். அப்படி வேக வைக்கும் போது அவ்வப்போது மூடியைத்
திறந்து கிளறி விட வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்ததும், சிறிது மிளகுத் தூள் சேர்த்து கிளறி
இறக்கினால், சுவையான ஹரியாலி சிக்கன் தயார்.
Image Courtesy: Freepik



Click it and Unblock the Notifications
