Just In
- 17 min ago நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- 1 hr ago தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- 2 hrs ago World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- 2 hrs ago வெயில் காலத்தில் உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்க தினமும் எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்கணும் தெரியுமா?
Don't Miss
- News தமிழகத்தின் 11 ஸ்டார் தொகுதிகளில் ஓட்டு சதவீதம் எவ்வளவு தெரியுமா? இதோ லிஸ்ட்
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Technology Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- Movies GOAT BTS video: மாஸ்கோவில் GOAT.. சூட்டிங் வீடியோவை வெளியிட்ட அர்ச்சனா கல்பாத்தி!
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
குல்பவேட் ரெசிபி /கோதுமை மாவு குல்பவேட் ரெசிபி செய்வது எப்படி
குல்பவேட் ஸ்வீட்ஸ் கர்நாடகவின் தனித்துவமான ஸ்வீட்ஸ் வகை ஆகும். அதைப் பற்றிய செய்முறை மற்றும் வீடியோ தொகுப்பு
குல்பவேட் ஸ்வீட்ஸ் கர்நாடகவின் தனித்துவமான ஸ்வீட்ஸ் வகை ஆகும். இந்த ஸ்வீட்ஸ் பொதுவாக கர்நாடகவில் கொண்டாடப்படும் அனைத்து பண்டிகைகளுக்கும் மற்றும் வீட்டின் சுப நிகழ்ச்சிகளுக்கும் இதை செய்து மகிழ்வர்.
இந்த குல்பவேட் ஸ்வீட்ஸ் கோதுமை மாவை வெல்லத்துடன் சேர்த்து காய்ச்சி செய்யப்படும் லட்டாகும். இதனுடன் சேர்க்கப்படும் தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் பொடி இந்த ஸ்வீட்டுக்கு நறுமணத்தை தருவதோடு நல்ல மொறு மொறுப்பான சுவையையும் தருகிறது.
இந்த ஆட்டா மற்றும் வெல்லத்தை கொண்டு தயாரிக்கப்படும் ரெசிபி மிகவும் சுலபமாகவும் விரைவாகவும் செய்து விடலாம். இதை எந்த அனுபவமும் இல்லாமல் எளிதாக செய்து விடலாம். கண்டிப்பாக இந்த ஸ்வீட்ஸ் உங்கள் நாக்கின் சுவை நரம்புகளுக்கு விருந்தளிக்கும்.
இந்த ரெசிபியை நீங்கள் சிரோட்டி ரவா கொண்டும் செய்யலாம். உங்கள் பண்டிகைகளுக்கு இந்த ரெசிபியை செய்வதற்கு தேவையான செய்முறை விளக்கங்களும் அதற்கான வீடியோ ரெசிபியும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
குல்பவேட் ரெசிபி வீடியோ
Recipe By: சுமா ஜெயந்த்
Recipe Type: ஸ்வீட்ஸ்
Serves: 15 லட்டுகள்
-
நெய் - 9 டேபிள் ஸ்பூன் +கிரீஸிங்
ஆட்டா (கோதுமை மாவு) - 1 பெளல்
வெல்லம் - 3/4 பெளல்
தண்ணீர் - 1/4 கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
ஏலக்காய் பொடி - 21/2 டேபிள் ஸ்பூன்
-
1. அடுப்பில் கடாயை வைத்து 3 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்
2. இப்பொழுது கோதுமை மாவை சேர்க்கவும்
3. மிதமான சூட்டில் வைத்து கோதுமை மாவை 5-7 நிமிடங்கள் வறுக்கவும். லேசான பொன்னிறமாக வரும் வரை வறுக்க வேண்டும்.
4. வறுத்த மாவை ஒரு தட்டிற்கு மாற்றி விட வேண்டும்
5. பிறகு அடுப்பில் கடாயை வைத்து அதில் உடைத்த வெல்லத்தை சேர்க்க வேண்டும்
6. உடனடியாக தண்ணீர் சேர்க்க வேண்டும். இதனால் கருகுவதை தவிர்க்கலாம்.
7. மிதமான தீயில் வெல்லம் முழுவதும் கரைந்து 5 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
8. இப்பொழுது இதனுடன் 3 டேபிள் ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும்
9. பிறகு வறுத்த கோதுமை மாவை சேர்த்து கிளறி விட்டு அடுப்பை அணைத்து விடவும்
10. நன்றாக பிசைவதற்கான பதத்தில் மாவை பிசைந்து கொள்ளவும்
11. இப்பொழுது தேங்காய் துருவலை அதனுடன் சேர்க்க வேண்டும்
12. மறுபடியும் 3 டேபிள் ஸ்பூன் நெய் விட வேண்டும்
13. இப்பொழுது ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறவும்
14. உங்கள் உள்ளங்கைகளால் நெய்யை தொட்டு தடவிக் கொள்ள வேண்டும்.
15. உங்கள் உள்ளங்கைகளை கொண்டு மாவை நன்றாக பிசைந்து கொள்ளவும்
16. இப்பொழுது சிறிய சிறிய லட்டுகளாக உருட்ட வேண்டும்.
17. ஒரு தட்டில் இந்த லட்டுகளை வைத்து பரிமாறவும்.
- 1.தேங்காய் துருவலுக்கு பதிலாக நன்றாக நறுக்கிய தேங்காய் துண்டுகளையும் பயன்படுத்தலாம்.
- 2.சூடான பதத்தில் மட்டுமே லட்டு செய்ய முடியும். எனவே சூடாக இருக்கும் போதே லட்டுவை பிடித்து விட வேண்டும்.
- பரிமாறும் அளவு - 1 லட்டு
- கலோரிகள் - 296
- கொழுப்பு - 5.5 கிராம்
- புரோட்டீன் - 5 கிராம்
- கார்போஹைட்ரேட் - 46 கிராம்
- சுகர் - 13.1 கிராம்
- நார்ச்சத்து - 4 கிராம்
படிப்படியான செய்முறை விளக்கம் :குல்பவேட் ரெசிபி செய்வது எப்படி