Latest Updates
-
ரக்ஷா பந்தன் நாளில் உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
Dengue: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
கொங்கணி ஸ்டைல் காராமணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குடிமகன் ஒவ்வொருவரும் 9 கோடி சம்பாதிக்கும் உலகின் பணக்கார நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்லை -
செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது! -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கை இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழப்போகுதாம் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும்
குலாப் ஜாமூன் கோப்தா கிரேவி
பொதுவாக குலாப் ஜாமூன் மிக்ஸைக் கொண்டு இனிப்பான குலாப் ஜாமூனைத் தான் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் குலாப் ஜாமூன் மிக்ஸைக் கொண்டு சப்பாத்திக்கு சுவையான ஒரு கிரேவி செய்யலாம் என்பது தெரியுமா?
தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைவரது வீடுகளிலும் குலாப் ஜாமூன் மிக்ஸ் இருக்கும். பொதுவாக குலாப் ஜாமூன் மிக்ஸைக் கொண்டு இனிப்பான குலாப் ஜாமூனைத் தான் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் குலாப் ஜாமூன் மிக்ஸைக் கொண்டு சப்பாத்திக்கு சுவையான ஒரு கிரேவி செய்யலாம் என்பது தெரியுமா? இந்த கிரேவிக்கு பெயர் தான் குலாப் ஜாமூன் கோப்தா கிரேவி.

உங்களுக்கு சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷாக ஒரு வித்தியாசமான கிரேவி செய்ய வேண்டுமானால், அதற்கு இந்த கிரேவி அற்புதமாக இருக்கும். கீழே குலாப் ஜாமூன் கோப்தா கிரேவியின் எளிமையான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து, எப்படி இருந்தது என்று உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
கோப்தாவிற்கு...
* ஜாமூன் மிக்ஸ் - 1 1/2 கப்
* துருவிய கேரட் - 1/4 கப்
* பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்
* கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
கிரேவிக்கு...
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* முந்திரி - 5
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 3/4 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 3/4 டீஸ்பூன்
* பிரஷ் க்ரீம் - 1 டேபிள் ஸ்பூன்
* பால் - 1/3 கப்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வெங்காயம், தக்காளி, முந்திரி போட்டு, 1/2 கப் நீரை ஊற்றி, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும். விசில் போனதும், குக்கரில் உள்ளதை குளிர வைத்து, மிக்ஸர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளிக்கவும்.
* பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் வாக்கி, பின் அரைத்த வெங்காய தக்காளி விழுதை சேர்த்து குறைவான தீயில் வேக வைக்கவும்.
* பிறகு அதில் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி, 5 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்கவும்.
* அதன் பின் பிரஷ் க்ரீம் சேர்த்து கிளறி, பாலை ஊற்றி நன்கு கொதிக்க விட்டு, கொத்தமல்லியைத் தூவி அடுப்பை அணைத்துவிடவும்.
* அடுத்ததாக ஒரு பௌலில் குலாப் ஜாமூன் மிக்ஸ், துருவிய கேரட், வெங்காயம், கொத்தமல்லியை சேர்த்து ஒருமுறை பிரட்டி விட வேண்டும்.
* பின் சிறிது நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்பு அதை சிறு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து, ஒரு டிஷ்யூ பேப்பரில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியில் அந்த உண்டையை தயாரித்து வைத்துள்ள கிரேவியில் போட்டு, ஒரு 5 நிமிடம் ஊற வைத்து, பின் சப்பாத்தியுடன் பரிமாறினால், குலாப் ஜாமூன் கோப்தா கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications