Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
தோசைக்கு ஒருடைம் வேர்க்கடலை வெச்சு இந்த மாதிரி சட்னி செய்யுங்க.. 2 தோசை எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
Verkadalai Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் தோசை சுட போகிறீர்களா? அந்த தோசைக்கு அருமையான சுவையைக் கொண்ட சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் வேர்க்கடலை உள்ளதா? அப்படியானால் அந்த வேர்க்கடலைக் கொண்டு அட்டகாசமான சுவையில் சட்னியை செய்யுங்கள்.
அதுவும் வழக்கமாக நீங்கள் செய்யும் சட்னியை போன்று செய்யாமல், சற்று வித்தியாசமாக தக்காளி சேர்த்து வதக்கி சட்னி செய்யுங்கள். இந்த சட்னி தோசையுடன் மட்டுமின்றி, இட்லியுடன் சேர்த்து சாப்பிடவும் நன்றாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு வேர்க்கடலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வேர்க்கடலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 5-6
* வரமிளகாய் - 7
* தக்காளி - 3 (நறுக்கியது)
* வறுத்த வேர்க்கடலை - 50 கிராம்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பூண்டு, வரமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கியதை சேர்த்து, அத்துடன் வறுத்த
வேர்க்கடலை, சுவைக்கேற்ப உப்பு மற்றும் தேவையான அளவு நீரை ஊற்றி சற்று
கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய்
மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி, சட்னியுடன்
சேர்த்து கிளறினால், சுவையான வேர்க்கடலை சட்னி தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications
