Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
மொறுமொறுப்பான... பச்சை பயறு வடை
Green Moong Dal Vadai: மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் ஒரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க கேட்கிறார்களா? மாலை நேரத்தில் காபி, டீ குடிக்கும் போது பஜ்ஜி, போண்டா, வடை போன்றவற்றை சாப்பிட அற்புதமாக இருக்கும்.
வீட்டில் இருப்போர் வடைகளை விரும்பி சாப்பிடுவார்களா? அதற்காக எப்போதும் ஒரே மாதிரி வடைகளை செய்து கொடுக்காதீர்கள். இன்று சற்று வித்தியாசமாக பச்சை பயறு கொண்டு வடை செய்து கொடுங்கள்.

இந்த பச்சை பயறு வடை செய்வது மிகவும் சுலபம். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். உங்களுக்கு பச்சை பயறு வடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே பச்சை பயறு வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சை பயறு - 1 கப்
* இஞ்சி - 1 இன்ச்
* பச்சை மிளகாய் - 6
* உப்பு - சுவைக்கேற்ப
* தயிர் - 1/4 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பச்சை பயறை கழுவி, நீரில் 3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
பச்சை பயறு நன்கு ஊறியதும், நீரை வடிகட்டிவிட வேண்டும்.
* பின் ஊறிய பச்சை பயறை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் இஞ்சி
மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரைத்த பச்சை பயறை
சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
குறைவான தீயில் வைத்து, நன்கு கிளற வேண்டும்.
* நீர் வற்றி பச்சை பயறு கலவை சற்று கெட்டியானதும் அடுப்பை அணைத்து
விட வேண்டும்.
* பின் அந்த பச்சை பயறு கலவையை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அத்துடன்
தயிர் மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு பிசைய வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், பிசைந்து வைத்துள்ள கலவையில், எலுமிச்சை அளவு
கலவையை எடுத்து உருட்டி, தட்டையாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக
பொரித்து எடுக்க வேண்டும்.
* இதேப் போல் அனைத்து கலவையையும் வடைகளாக தட்டி, எண்ணெயில் பொரித்து
எடுத்தால், சுவையான மற்றும் மொறுமொறுப்பான பச்சை பயறு வடை தயார்.
Image Courtesy: subbuskitchen



Click it and Unblock the Notifications