Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
நைட் சப்பாத்திக்கு பாசிப்பயறு வெச்சு இந்த கிரேவி செய்யுங்க... 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க...
Pasi Payaru Gravy Recipe In Tamil: இன்று இரவு வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? எப்போதும் சப்பாத்திக்கு ஒரே மாதிரி கிரேவி செய்து போரடித்து விட்டதா? உங்கள் வீட்டில் பச்சை பயறு அல்லது பாசிப்பயறு உள்ளதா?
அப்படியானால் அந்த பச்சை பயறு கொண்டு சூப்பரான சுவையில் கிரேவி செய்யுங்கள். இந்த கிரேவி சப்பாத்தி, பூரியுடன் மட்டுமின்றி சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு பாசிப்பயறு கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாசிப்பயறு கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசிப்பயறு/ பச்சை பயறு - 1 கப்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 3/4 டீஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 4
* பிரியாணி இலை - 1
* வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
* குழம்பு மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* பூண்டு - 5 பல்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பயறை
சேர்த்து நல்ல மணம் வந்து, லேசாக நிறம் மாறும் வரை வறுத்து இறக்கி,
நீரில் கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகம், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அதன் பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பிறகு நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரை
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின் கழுவி வைத்துள்ள பாசிப்பயறை சேர்த்து நன்கு 1 நிமிடம் கிளறி
விட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு குக்கரை மூடி 6-7 விசில் விட்டு இறக்கிக் கொள்ள
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, நன்கு கிளறி, பொடியாக நறுக்கி
வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து 2 நிமிடம் கிளறி வேக வைத்து,
கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான பாசிப்பயறு கிரேவி
தயார்.



Click it and Unblock the Notifications











