Latest Updates
-
இன்றைய ராசிபலன் 18 மே 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு கேட்ட வரம் கிடைக்கும் நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசி செல்வதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை எக் ரைஸ் ரெசிபி - செஞ்சு பாருங்க, காரசாரமா அட்டகாசமா இருக்கும் -
விஜய் வருங்கால முதல்வர்னு கேட்டதும் த்ரிஷா ஏன் இப்படி வெட்கப்பட்டார்? வைரலாகும் அந்த ஒரு நொடி வீடியோ! -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் எதிர்காலத்தை கணிக்கும் அதிசய பிறவிகளாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன -
விவாகரத்து செய்ய இவ்வளவு செலவாகுமா? 2026-ல் உங்கள் பணத்தை மிச்சப்படுத்த இந்த ரகசியங்களை தெரிஞ்சுக்கோங்க! -
சாணக்கிய நீதி படி நல்ல கணவரிடம் இருக்க வேண்டிய 5 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட இதுல எத்தனை இருக்கு? -
மாதம்பட்டி தக்காளி ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க, வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
கோடை வெயிலை சமாளிக்க இந்த செடிகள் போதும்… வீட்டில் வைத்தால் பணமும் அதிர்ஷ்டமும் தானாக வரும்! -
10,000 ஆண்டுகளுக்கு முன்பே உலகில் தோன்றிய முதல் காய்கறி எது தெரியுமா? இப்போதும் நாம இதை சாப்பிடுறோம்
1/2 கப் பச்சை பயறு இருந்தா.. காலையில் இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்..
Green Moong Dal Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் காலை டிபனாக இருக்குமா? அந்த இட்லி, தோசைக்கு எப்படியும் சட்னியைத் தான் செய்வீர்களா? எப்போதும் ஒரே மாதிரி அரைத்த சட்னியைத் தான் மீண்டும் மீண்டும் செய்வீர்களா? இதனால் உங்களுக்கே சட்னி அரைக்க போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான ருசியில் சட்னியை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா?

அதுவும் நீங்கள் எடையைக் குறைக்க முயற்சிக்கிறீர்களா? அப்படியானால் புரோட்டீன் அதிகம் நிறைந்த பச்சை பயறு கொண்டு சட்னி செய்து சாப்பிடுங்கள். இந்த பச்சை பயறு சட்னியை ஒருமுறை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், பின் அடிக்கடி இந்த சட்னியை உங்கள் வீட்டில் செய்வீர்கள்.முக்கியமாக இந்த சட்னியை செய்தால், வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிடுவார்கள். அந்த அளவில் சட்னியின் சுவை பிரமாதமாக இருக்கும்.
இந்த பச்சை பயறு சட்னி ரெசிபி குறித்து RK Recipes Bowl என்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த பச்சை பயறு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை பயறு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பச்சை பயறு - 1/2 கப்
* வரமிளகாய் - 5
* சின்ன வெங்காயம் - 10
* புளி - சிறிய துண்டு
* பூண்டு - 3 பல்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பச்சை பயறை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க
வேண்டும்.
* பின் அதில் 5 வரமிளகாய், 10 சின்ன வெங்காயம், சிறிய துண்டு புளி
மற்றும் 3 பல் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் துருவிய தேங்காயை 1/2 கப் சேர்த்து நன்கு வதக்கி
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, முதலில் ஒருமுறை அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் அதில் 1 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலையை சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* அதன் பின் ஒரு கிண்ணத்தில் அரைத்த சட்னியை எடுத்துக் கொண்டு, ஜாரில்
சிறிது நீரை ஊற்றி அலசி சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக சட்னியை தாளிப்பதற்கு ஒரு கரண்டியை அடுப்பில் வைத்து,
அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு,
கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து
கலந்தால், சுவையான பச்சை பயறு சட்னி தயார்.



Click it and Unblock the Notifications











