Latest Updates
-
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும்
1/2 கப் பச்சை பயறு இருந்தா.. இப்படி போர்த்தா செஞ்சு சாப்பிடுங்க... வேற லெவல்-ல இருக்கும்..
Pachai Payaru Bhorta Recipe In Tamil: தினமும் மதிய வேளையில் ஒரே மாதிரி சமைத்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் ஏதாவது சமைத்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் போர்த்தா செய்து சாப்பிடுங்கள். அதுவும் 1/2 கப் பச்சை பயறு இருந்தால், அதைக் கொண்டு ருசியான போர்த்தா செய்து சாப்பிடுங்கள்.
இந்த போர்த்தாவை சூடான சாதத்துடன் நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடும் போது சுவை வேற லெவலில் இருக்கும். ஒருமுறை இப்படி செய்து சாப்பிட்டால், பின் வாரம் ஒருமுறை கட்டாயம் இந்த போர்த்தாவை செய்து சாப்பிடுவீர்கள்.

உங்களுக்கு பச்சை பயறு போர்த்தாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை பயறு போர்த்தா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* பச்சை பயறு - 1/2 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
வதக்குவதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன் + 2 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 10 பல்
* வரமிளகாய் - 3
* பெரிய வெங்காயம் - 1 + 1
* தக்காளி - 2
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 கப் பச்சை பயறை
சேர்த்து லேசாக வறுத்து இறக்க வேண்டும்.
* அதன் பின் குக்கரில் வறுத்த பச்சை பயறை சேர்த்து நீரில் கழுவி, பின்
பயறு மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு
சேர்த்து கலந்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, மிதமான தீயில்
வைத்து 5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், மல்லி, சீரகம் சேர்த்து நன்கு வறுத்து, ஒரு தட்டில்
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் உள்ள எண்ணெயில் பூண்டு மற்றும் வரமிளகாய்
சேர்த்து நன்கு வதக்கி, அதையும் தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், மெல்லியதாக
நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கி, தட்டில்
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி, தட்டில்
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த மல்லி, சீரகம், வரமிளகாய் சேர்த்து
கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து ஒருமுறை அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் அரைத்த மல்லி சீரகம் தக்காளி விழுது,
வதக்கி வைத்துள்ள பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய 1 கைப்பிடி கொத்தமல்லி மற்றும் 1
வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து, வேக வைத்துள்ள பச்சை
பயறையும் சேர்த்து கைகளால் நன்கு பிசைந்தால், சுவையான பச்சை பயறு
போர்த்தா தயார்.



Click it and Unblock the Notifications