குக் வித் கோமாளியில் நடிகர் விஜய் சேதுபதி கூறிய க்ரீன் சிக்கன் 65 ரெசிபியை எப்படி செய்யணும் தெரியுமா?

Posted By:

Green Chicken 65 Recipe In Tamil: விடுமுறை நாட்களில் உங்கள் வீட்டில் தவறாமல் சிக்கன் வாங்கி 65 செய்வீர்களா? எப்போதும் ஒரே ஸ்டைலில் சிக்கன் 65 செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் 65 செய்ய நினைக்கிறீர்களா?

அப்படியானால் குக் வித் கோமாளியில் நடிகர் விஜய் சேதுபதி கூறிய க்ரீன் சிக்கன் 65 ரெசிபியை உங்கள் வீட்டில் ட்ரை செய்யுங்கள். இந்த க்ரீன் சிக்கன் 65 செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, உங்கள் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

Green Chicken 65 How To Make a Green Chicken 65 Recipe

உங்களுக்கு க்ரீன் சிக்கன் 65 ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே க்ரீன் சிக்கன் 65 ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பச்சை மிளகாய் - 2
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* இஞ்சி - 1 இன்ச் துண்டு
* பூண்டு - 5 பல்
* புதினா - சிறிது
* சிக்கன் - 250 கிராம்
* மல்லித் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* அரிசி மாவு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எலுமிச்சை சாறு - சிறிது
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் பச்சை மிளகாய், சீரகம், கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, புதினா சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் சிக்கனை எடுத்து, அதில் மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், மிளகுத் தூள், தயிர், அரிசி மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த விழுதை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு பிசைந்து, 2 மணிநேரம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, அத்துடன் சிறிது கறிவேப்பிலை சேர்த்து, சிக்கனை பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான க்ரீன் சிக்கன் 65 தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, July 7, 2024, 14:47 [IST]
Desktop Bottom Promotion