Latest Updates
-
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க..
சப்பாத்திக்கு ஒருமுறை குடைமிளகாய் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் அள்ளும்...
Green Capsicum Gravy Recipe In Tamil: சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான சைடு டிஷ் தான் செய்வீர்களா? இப்படி ஒரே மாதிரி சைடு டிஷ் செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் உள்ளோர் வித்தியாசமான கிரேவியை செய்து கொடுக்க கேட்கிறார்களா?
உங்கள் வீட்டில் குடைமிளகாய் உள்ளதா? அப்படியானால் அந்த குடைமிளகாய் கொண்டு கிரேவி செய்யுங்கள். இந்த கிரேவி சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும்.

உங்களுக்கு குடைமிளகாய் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குடைமிளகாய் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* குடைமிளகாய் - 1 (பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)
* பெரிய வெங்காயம் - 1 (பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 2
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* கடலை மாவு - 1 ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* புளிப்பில்லாத தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம்
வதக்கி ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் வாணலியில் உள்ள மீதமுள்ள எண்ணெயில் சீரகம், பிரியாணி இலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும்
வரை வதக்க வேண்டும். பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை
வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
தக்காளி வதங்குவதற்குள் மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில்
கடலை மாவை சேர்த்து வறுத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* தக்காளி நன்கு வதக்கியதும், அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம்
மசாலா, மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு 3-4
நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் புளிப்பில்லாத தயிர் மற்றும் வறுத்த கடலை மாவை சேர்த்து
2 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கிளறி,
எண்ணெய் பிரியும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* கிரேவி நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் வதக்கி வைத்துள்ள
குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து கிளறி, 5 நிமிடம் நன்கு
கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான குடைமிளகாய் கிரேவி தயார்.
Image Courtesy: Apoorvaa's Virundu



Click it and Unblock the Notifications
