Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
1 கப் கோதுமை ரவை வெச்சு இப்படி ஒருடைம் பொங்கல் செஞ்சு பாருங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்...
Gothumai Rava Pongal Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் தோசை, இட்லி மாவும் இல்லையா? வீட்டில் கோதுமை ரவை உள்ளதா? அப்படியானால் அந்த கோதுமை ரவையைக் கொண்டு பொங்கல் செய்யுங்கள்.
இதுவரை நீங்கள் கோதுமை ரவை கொண்டு உப்புமா தான் செய்திருப்பீர்கள். ஆனால் அதைக் கொண்டு பொங்கல் செய்து பாருங்கள், இதனால் சுவை இன்னும் அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு கோதுமை ரவை பொங்கல் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை ரவா பொங்கல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை ரவை - 1 கப்
* பாசிப்பருப்பு - 1/4 கப்
* தண்ணீர் - 4 கப்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* இஞ்சி - 1/2 இன்ச்
* பச்சை மிளகாய் - 2
* கறிவேப்பிலை - 2 கொத்து
* உடைத்த முந்திரி - 10-15
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் பாசிப்பருப்பை நீரில் 2 முறை கழுவி விட்டு, ஒரு
வடிகட்டியில் போட்டு தனியாக வைத்து நீரை முற்றிலும் வடிகட்ட விட
வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் 4 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு
கொதிக்க விட வேண்டும்.
* பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய்
ஊற்றி சூடானதும், சீரகம், மிளகு சேர்த்து நன்கு பொரிய விட
வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிவை
மற்றும் உடைத்த முந்திரியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* முந்திரியின் நிறம் லேசாக மாறத் தொடங்கியதும், அதில் பெருங்காயத்
தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, பின் பாசிப்பருப்பை சேர்த்து 1
நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து கோதுமை ரவையை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வதக்க
வேண்டும்.
* பின் அதில் நன்கு கொதித்த சுடுநீரை ஊற்றி கிளறி, தேவையான அளவு உப்பு
சேர்த்து கிளறி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து நெய் ஊற்றி கிளறினால், சுவையான
கோதுமை ரவா பொங்கல் தயார்.
Image Courtesy: Kavitha Samayalarai கவிதா சமையலறை



Click it and Unblock the Notifications
