Latest Updates
-
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா?
கோல்கொண்டா சிக்கன் ரெசிபி... ஒரு தடவ செஞ்சு பாருங்க... அப்புறம் எல்லா வாரமும் செய்வீங்க...!
Golconda Chicken Recipe in Tamil: அசைவ உணவுகளில் அனைவருக்கும் பிடித்த ஒரு பொருள் என்றால் அது சிக்கன்தான். சிக்கன் சுவையானது என்பதை விட அது சமைப்பதற்கு மிகவும் எளிதானதும் கூட. அப்படிப்பட்ட ஒரு சுவையான மற்றும் எளிதான சிக்கன்தான் கோல்கொண்டா சிக்கன். இந்த தனித்துவமான ரெசிபி டெக்கான் பகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது, தனித்துவமான சுவையுடன் கூடிய காரமான ஸ்டார்ட்டர்களை விரும்புபவர்களுக்காகவே உருவாக்கப்பட்டது இந்த சிக்கன்.
எலும்பில்லாத சிக்கன் துண்டுகளில் நிறைய மசாலா பொருட்களால் மேரினேட் செய்யப்பட்டு, பின்னர் நிறைய வெங்காயம், பச்சை மிளகாய், தயிர், பூண்டு, இஞ்சி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கப்படுகிறது. இது சாம்பார் சாதம், பிரியாணி போன்றவற்றுடன் சாப்பிடுவதற்கு சிறந்த ஸ்டார்ட்டராக இருக்கும். இந்த பதிவில் அட்டகாசமான கோல்கொண்டா சிக்கனை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ
- சோள மாவு - 50 கிராம்
- பச்சை மிளகாய் - 10
- இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
- 3 கொத்து கறிவேப்பிலை
- தயிர் - 100 கிராம்
- மல்லித்தூள் - 1/2 ஸ்பூன்
- வெங்காயம் - 100 கிராம்
- மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
- முட்டை - 1
- எலுமிச்சைச்சாறு - 2 ஸ்பூன்
- மைதா - 2 ஸ்பூன்
- நறுக்கிய பூண்டு - 2 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- பொரிக்க எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- சிக்கனை நன்கு கழுவி ஈரமாக இல்லாமல் வைத்துக் கொள்ளவும்.
- சிக்கனிலிருந்து தண்ணீர் வடிந்ததும் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது ஆகியவற்றைச் சேர்க்கவும். அதன் பின்னர் சோள மாவு, மைதா மாவு, உப்பு, மிளகுத்தூள் மற்றும் மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.
- இந்த கலவையை குளிர்சாதனப் பெட்டியில் அரை மணி நேரம் வைக்கவும்.
- பின்னர் முட்டை மற்றும் தண்ணீரை சிக்கனில் சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் இந்த கலவையை மீண்டும் அரை மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
- ஒரு வாணலியில் பொரிக்க தேவையான எண்ணெயை ஊற்றி எண்ணெய் சூடானதும் மேரினேட் செய்யப்பட்ட சிக்கனை ஆழமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
- பின்னர் மீண்டும் ஒரு வாணலியில் சமையல் எண்ணெயைச் சேர்த்து, நறுக்கிய பூண்டு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
- பின்னர் இதில் தயிர் சேர்த்து நன்கு வதக்கவும். அதன்பின் வறுத்த சிக்கன், மிளகாய் தூள், மல்லித்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
- சிக்கன் மசாலாவை நன்கு உறிஞ்சும் வரை வதக்கி விட்டு அதன்பின் எலுமிச்சைசாறு சேர்க்கவும்.
- 2 நிமிடங்கள் கழித்து வறுத்த கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் சூப்பரான கோல்கொண்டா சிக்கன் ரெடி!



Click it and Unblock the Notifications





