Latest Updates
-
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்!
காலிஃப்ளவரை இந்த மாதிரி மசாலா செஞ்சு பாருங்க... சாதத்தோட சாப்பிட வேற லெவல் சைடிஷாக இருக்கும்...!
Gobi Masala Recipe in Tamil: காய்கறிகளிலேயே வெகுசில காய்கறிகள் மட்டுமே அனைவருக்கும் பிடித்த காய்கறிகளாக இருக்கும். அப்படி அனைவருக்கும் பிடித்த காய்கறிகளில் ஒன்றுதான் காலிஃப்ளவர். பொதுவாக காலிஃப்ளவரை சில்லியாக சாப்பிடவோ அல்லது மஞ்சூரியனாகவோ சாப்பிட விரும்புவார்கள். உண்மையில் காலிஃப்ளவரை பொரியல், குருமா என எப்படி வேண்டுமென்றாலும் சுவையாக சமைக்கலாம்.
இந்த பதிவில் வித்தியாசமான சுவையில் காலிஃப்ளவர் மசாலாவை எப்படி செய்யலாமென்று தெரிந்து கொள்ளலாம். இந்த காலிஃப்ளவர் மசாலா சாம்பார் சாதம், ரசம் சாதம் போன்றவற்றுடன் சாப்பிட சூப்பர் காம்பினேஷனாக இருக்கும். மேலும் இதை வெறும் சாதத்தில் சேர்த்து பிசைந்தும் சாப்பிடலாம்.

உங்கள் குழந்தைகளுக்கு வழக்கமான சாம்பார், ரசம் என சமைத்துக் கொடுத்து போரடித்து விட்டதா? அப்படியெனில் இந்த கோபி மசாலாவை செய்து கொடுத்து வீட்டில் எல்லோரையும் அசத்துங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- பெரிய காலிஃப்ளவர் - ஒன்று
- பெரிய வெங்காயம் - 3
- தக்காளி - 2
- மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
- வரமிளகாய் - 4
தாளிக்க:
- கடுகு - அரை ஸ்பூன்
- உளுந்து - அரை ஸ்பூன்
- தட்டிய பூண்டு - 5
- கடலைப்பருப்பு - அரை ஸ்பூன்
அரைப்பதற்கு:
- தேங்காய் - கால் மூடி
- நிலக்கடலை - 2 கைப்பிடி
- தனியா - ஒரு கைப்பிடி
- மிளகு - அரை ஸ்பூன்
- வர மிளகாய் - 5
- பூண்டு -ஒன்று
- பட்டை - ஒரு துண்டு
- கிராம்பு - 4
செய்முறை:
- அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் தேங்காய், பூண்டு தவிர அனைத்தையும் தனித்தனியாக வெறும் கடாயில் வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
- நிலக்கடலையை தோல் நீக்கி நீர் சேர்த்து மென்மையாக அரைத்துக்கொள்ளவும்.
- வெங்காயத்தை நீளமாகவும், தக்காளியை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- காலிஃப்ளவரை நன்றாக சுத்தம் செய்து பிரித்து வெந்நீரில் 5 நிமிடம் ஊற வைக்கவும்.
- வறுத்து வைத்த மசாலாப் பொருட்களை தேங்காய் மற்றும் பூண்டுடன் சேர்த்து மிக்ஸியில் மென்மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் அதில் உளுந்து மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். பின்னர் தட்டி வைத்துள்ள பூண்டை சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் நறுக்கின வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
- பின்னர் அதில் அரைத்த மசாலா விழுதை சேர்த்து நன்றாக கலக்கவும். பின் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- பின்னர் தக்காளி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கிளறவும்.
- பின் காலிஃப்ளவரை சேர்த்து கிளறி தேவையான அளவு நீர் சேர்த்து வேக விடவும்.
- மசாலா நன்கு கொதித்து கிரேவி பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.
- அட்டகாசமான கோபி மசாலா தயார்.
- இந்த கோபி மசாலா சாம்பார், ரசம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடவும், வெறும் சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications