Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
1 கப் ராகி மாவு இருந்தா.. விநாயகர் சதுர்த்திக்கு இந்த கொழுக்கட்டையை செய்யுங்க.. வெற லெவல்-ல இருக்கும்..
Ganesh Chaturthi Special Ragi Pidi Kozhukattai Recipe In Tamil: விநாயகர் சதுர்த்தி வரப்போகிறது. விநாயகர் சதுர்த்தி என்றாலே அனைவருக்கும் கொழுக்கட்டை தான் நினைவிற்கு வரும். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 27 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
இந்த விநாயகர் சதுர்த்தி நாளன்று அனைத்து வீடுகளிலும் விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டைகளை பலவாறு செய்து படைத்து வழிபடுவார்கள். கொழுக்கட்டையில் பல வகைகள் உள்ளன. அதில் ராகி மாவைக் கொண்டு செய்யக்கூடியது தான் ராகி பிடி கொழுக்கட்டை. இந்த கொழுக்கட்டை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு ராகி பிடி கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி பிடி கொழுக்கட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* ராகி மாவு - 1 கப்
* பொடித்த வெல்லம் - 3/4 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* காய்ச்சி ஆற வைத்த பால் - 1/2 கப்
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
நெய் ஊற்றி சூடானதும், ராகி மாவை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க
வேண்டும்.
* பின் அதை இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தை சேர்த்து, வெல்லம்
மூழ்கும் அளவில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கிளறி, வெல்லத்தை
கரைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியில் கரைத்த வெல்லத்தை வடிகட்டி ஊற்றி,
அடுப்பில் வைத்து, அதில் காய்ச்சி ஆற வைத்த பாலை ஊற்றி, ஏலக்காய் தூள்
சேர்த்து கிளறி, கொதிக்க வைக்க வேண்டும்.
* வெல்ல நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் வறுத்த ராகி மாவை சேர்த்து
கட்டிகளின்றி நன்கு கிளறி, நீர் வற்றும் வரை கிளறி விட வேண்டும்.
* நீர் வற்றி கெட்டியானதும், அடுப்பை அணைத்துவிட்டு, மூடி வைத்து ராகி
மாவை குளிர வைக்க வேண்டும்.
* மாவு நன்கு குளிர்ந்ததும், அதில் துருவிய தேங்காயை சேர்த்து கைகளால்
பிசைந்து விட வேண்டும்.
* இறுதியாக இட்லி தட்டில், பிசைந்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக
எடுத்து பிடி கொழுக்கட்டை போன்று பிடித்து வைத்து, இட்லி
பாத்திரத்தினுள் வைத்து மூடி, 15 நிமிடம் வேக வைத்து எடுத்தால்,
சுவையான ராகி பிடி கொழுக்கட்டை தயார்.



Click it and Unblock the Notifications
