Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
வெறும் 3 பொருள் வெச்சு.. விநாயகர் சதுர்த்திக்கு சூப்பர் லட்டு செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க..
Ganesh Chaturthi Special Ladoo Recipes In Tamil: விநாயகர் சதுர்த்தி வரப்போகிறது. விநாயகர் பிறந்த நாளாக விநாயகர் சதுர்த்தி நாளில் விநாயகருக்கு பிடித்த பலவிதமான கொழுக்கட்டை, லட்டு, மோதகம், சுண்டல் போன்றவற்றை செய்து படைத்து வழிபடுவது வழக்கம்.
இந்த விநாயகர் சதுர்த்திக்கு உங்கள் வீட்டில் பிள்ளையாருக்கு கொழுக்கட்டையுடன், பலவிதமான லட்டு ரெசிபிக்களையும் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் ரவா லட்டு, மோத்திசூர் லட்டுடன், வேர்க்கடலை லட்டு, கடலைமாவு லட்டு போன்றவற்றையும் சேர்த்து செய்யுங்கள். இந்த இரண்டு லட்டுகளும் செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும்.

உங்களுக்கு வேர்க்கடலை லட்டு மற்றும் கடலைமாவு லட்டுக்களை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வேர்க்கடலை லட்டு மற்றும் கடலைமாவு லட்டு ரெசிபிக்களின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
1. வேர்க்கடலை லட்டு
தேவையான பொருட்கள்:
* பச்சை வேர்க்கடலை - 500 கிராம்
* பொடித்த வெல்லம் - 1/2 கப்
* ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பச்சை வேர்க்கடலையை
சேர்த்து, நன்கு வறுக்க வேண்டும்.
* வேர்க்கடலை நன்கு வறுபட்டதும், அதை இறக்கி குளிர வைத்து, அதன் தோலை
நீக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த வேர்க்கடலையை சேர்த்து கொரகொரவென்று
பல்ஸ் மோடில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் பொடித்த வெல்லத்தை சேர்த்து, பல்ஸ் மோடில் விட்டு
விட்டு அரைக்க வேண்டும்.
* பிறகு அதில் ஏலக்காய் தூளை சேர்த்து மீண்டும் பல்ஸ் மோடில் விட்டு
விட்டு அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அரைத்த கலவையை கொஞ்சம் கொஞ்சமாக கையில் எடுத்து, உருண்டையாக
உருட்டினால், வேர்க்கடலை லட்டு தயார்.
2. கடலை மாவு லட்டு
தேவையான பொருட்கள்:
* சர்க்கரை - 1/2 கப்
* ஏலக்காய் - 4-5
* நெய் - 2 டீஸ்பூன் + 1/4 கப் + 1 டீஸ்பூன் + 1 டீஸ்பூன் + 1
டீஸ்பூன்
* உடைத்த முந்திரி - சிறிது
* கடலை மாவு - 2 கப்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் சர்க்கரை மற்றும் வாசனைக்கு ஏலக்காயை
சேர்த்து நன்கு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் நெய் ஊற்றி
சூடானதும், உடைத்த முந்திரியை சேர்த்து நன்கு வறுத்து ஒரு தட்டில்
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் நெய்யை ஊற்றி
உருகியதும், 250 கிராம் அளவுள்ள கப்பில் 2 கப் கடலை மாவை எடுத்து
சேர்த்து, நன்கு கிளறி விட வேண்டும்.
* கடலை மாவின் நிறம் மாறி வந்ததும், 1 டீஸ்பூன் நெய் ஊற்றி தொடர்ந்து
கிளறி விட வேண்டும். இப்படி 5 நிமிடத்திற்கு ஒருமுறை 1 டீஸ்பூன் நெய்
என 4 முறை நெய் ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
* அப்படி கடைசியாக 4 டீஸ்பூன் நெய் சேர்த்து கிளறும் போது, மாவானது
உதிரி உதிரியாக வரும். அப்போது மாவை அழுத்தி விட்டு தேய்த்து கிளறி
இறக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* மாவு வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும், அதில் பொடித்த சர்க்கரையை
சேர்த்து, கைகளால் நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து, லட்டு போன்று பிடிக்க
வரும் போது, அதில் வறுத்த முந்திரியை சேர்த்து சப்பாத்தி மாவு
பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பிறகு கையில் நெய் தடவி, கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து லட்டு போன்று
உருட்டினால், கடலை மாவு லட்டு தயார்.



Click it and Unblock the Notifications
