For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆரோக்கியமான ப்ரூட் சாட் ரெசிபி செய்வது எப்படி எனத் தெரியுமா?

ப்ரூட் சாட் மிகவும் புகழ் பெற்ற பஞ்சாப் மற்றும் டெல்லியின் தெருவோர கடைகளில் கிடைக்கும் முக்கியமான உணவாகும்.இந்த ரெசிபியை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம

Posted By: Suganthi R
|

ப்ரூட் சாட் மிகவும் புகழ் பெற்ற பஞ்சாப் மற்றும் டெல்லியின் தெருவோர கடைகளில் கிடைக்கும் முக்கியமான உணவாகும். இந்த ப்ரூட் சாட் ரெசிபி உங்களுக்கு விருப்பமான எந்த வகையான பழங்களையும் பயன்படுத்தி அப்படியே லெமன் ஜூஸ் சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் காரசாரமான சாட் மசாலா சேர்த்து செய்யப்படும் ரெசிபி ஆகும். இந்த ரெசிபிக்கு ஆப்பிள், வாழைப்பழம், கொய்யா, கிவி, பேரிக்காய் மற்றும் மாதுளை பழம் போன்றவற்றை சேர்க்கலாம்.

இந்த ரெசிபியில் அதிகமான நார்ச்சத்து இருப்பதால் இது குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் மிகவும் நல்லது. தினமும் ப்ரூட் சாலட் சாப்பிட்டு வெறுப்புடன் இருக்கும் உங்கள் குழந்தைகளுக்கு இந்த ரெசிபி வேறு ஒரு சுவையான உணவாக அமையும்.

இந்த ப்ரூட் சாட் ரெசிபியை மிகவும் விரைவாகவும் சுலபமாகவும் செய்திடலாம். எனவே ஆரோக்கியமான ரெசிபிக்கு சமையலறையிலயே கிடக்காமல் எளிதாக முடித்து விருப்பத்துடன் இந்த உணவை சாப்பிடலாம். இந்த ரெசிபியை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.

ப்ரூட் சாட் வீடியோ ரெசிபி

fruit chaat recipe
ப்ரூட் சாட் ரெசிபி /இன்டியன் ப்ரூட் சாலட் /மிக்ஸ்டு ப்ரூட் சாட்/ஈஸி ப்ரூட் சாட் ரெசிபி
ப்ரூட் சாட் ரெசிபி /இன்டியன் ப்ரூட் சாலட் /மிக்ஸ்டு ப்ரூட் சாட்/ஈஸி ப்ரூட் சாட் ரெசிபி
Prep Time
10 Mins
Cook Time
5M
Total Time
15 Mins

Recipe By: செளமியா சேகர்

Recipe Type: ஸ்நாக்ஸ்

Serves: 4 பேர்கள்

Ingredients
  • வாழைப்பழம் - 2

    ஆப்பிள் - 1

    கொய்யா - 1

    மாதுளை பழம் - 1/2

    கிவி - 1

    பேரிக்காய் - 1

    லெமன் ஜூஸ் - 4 டேபிள் ஸ்பூன்

    இந்துப்பு - தேவைக்கேற்ப

    சாட் மசாலா - 1/2 டேபிள் ஸ்பூன்

Red Rice Kanda Poha
How to Prepare
  • 1. முதலில் வாழைப்பழத்தை தோலுரித்து வட்ட வடிவத்தில் வெட்டி கொள்ளவும்.

    2. ஆப்பிளை பாதியாக வெட்டி விதைகளை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    3. மாதுளை பழத்தை பாதியாக வெட்டி அதில் உள்ள விதைகளை ஒரு கப்பில் எடுத்து கொள்ளவும்.

    4. கிவி பழத்தின் தோலை சீவி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    5. பேரிக்காயின் மேல் கீழ் பகுதிகளை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    6. மேலே நறுக்கிய எல்லா பழங்களையும் நன்றாக கலக்க ஒரு பெளலில் எடுத்து கொள்ளவும்.

    7. அதனுடன் சிறிது லெமன் ஜூஸ் சேர்க்கவும்.

    8. பிறகு அதனுடன் இந்துப்புவை சேர்க்கவும்.

    9. அதனுடன் சாட் மசாலா சேர்த்து நன்றாக கலக்கவும்.

    10. நன்றாக கிளறி அப்படியே பரிமாறவும்.

    11. சுவையான உப்பு காரத்துடன் கூடிய ஆரோக்கியமான ப்ரூட் சாட் ரெசிபி ரெடி.

Instructions
  • 1. உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எந்த பழவகைகளையும் பயன்படுத்தலாம்.
  • 2. இன்னும் காரசாரமான சுவை தேவைப்பட்டால் அதனுடன் மிளகாய் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து கொள்ளலாம்.
  • 3. இதன் சுவையை இன்னும் கூட்ட விரும்பினால் சீரகப் பொடி சேர்த்து கொள்ளவும்.
  • 4. விரத நிகழ்ச்சிகள் இல்லாத சமயங்களில் இந்துப்புக்கு பதிலாக சாதாரண உப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
Nutritional Information
  • பரிமாறும் அளவு - 1 பெளல்
  • கலோரிகள் - 120 கலோரிகள்
  • கொழுப்பு - 0.7 கிராம்
  • புரோட்டீன் - 1.6 கிராம்
  • கார்போஹைட்ரேட் - 24.1 கிராம்
  • நார்ச்சத்து - 2.7 கிராம்

படிப்படியான செய்முறை விளக்கம் : ப்ரூட் சாட் ரெசிபி செய்வது எப்படி

1. முதலில் வாழைப்பழத்தை தோலுரித்து வட்ட வடிவத்தில் வெட்டி கொள்ளவும்.

2. ஆப்பிளை பாதியாக வெட்டி விதைகளை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

3. மாதுளை பழத்தை பாதியாக வெட்டி அதில் உள்ள விதைகளை ஒரு கப்பில் எடுத்து கொள்ளவும்.

4. கிவி பழத்தின் தோலை சீவி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

5. பேரிக்காயின் மேல் கீழ் பகுதிகளை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

6. மேலே நறுக்கிய எல்லா பழங்களையும் நன்றாக கலக்க ஒரு பெளலில் எடுத்து கொள்ளவும்.

7. அதனுடன் சிறிது லெமன் ஜூஸ் சேர்க்கவும்.

8. பிறகு அதனுடன் இந்துப்புவை சேர்க்கவும்.

9. அதனுடன் சாட் மசாலா சேர்த்து நன்றாக கலக்கவும்.

10. நன்றாக கிளறி அப்படியே பரிமாறவும்.

11. சுவையான உப்பு காரத்துடன் கூடிய ஆரோக்கியமான ப்ரூட் சாட் ரெசிபி ரெடி.

[ 4 of 5 - 72 Users]
English summary

Fruit Chaat Recipe | Indian Fruit Salad | Mixed Fruit Chaat

Fruit Chaat Recipe | Indian Fruit Salad | Mixed Fruit Chaat
Story first published: Wednesday, September 13, 2017, 11:20 [IST]
Desktop Bottom Promotion