Latest Updates
-
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
மணமணக்கும்.. ஈரோடு ஸ்டைல் நாட்டுக்கோழி குழம்பு - இத ஒருவாட்டி செஞ்சு சாப்பிடுங்க.. சளி உடனே கரைஞ்சிடும்...
Erode Style Nattu Kozhi Kuzhambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் சளி பிடித்து அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்களா? அப்படியானால் நாட்டுக்கோழியை வாங்கி வந்து, அதை ஈரோடு ஸ்டைலில் குழம்பு செய்து கொடுங்கள். இதனால் சளி உடனே முறிந்து வெளியேறிவிடும்.
விடுமுறை நாட்களில் நல்ல சுவையான ஒரு அசைவ குழம்பு செய்ய நினைத்தால், இந்த ஈரோடு ஸ்டைல் நாட்டுக்கோழி குழம்பை செய்யலாம். இது இட்லி, தோசை, சாதம் என அனைத்துடனும் சாப்பிட அருமையாக இருக்கும். இந்த குழம்பை செய்யும் போதே, வீடு முழுவதும் கமகமவென்று மணக்க தொடங்கி, வீட்டில் உள்ளோர் சமையலறைக்கே வந்துவிடுவார்கள். அந்த அளவில் அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு ஈரோடு ஸ்டைல் நாட்டுக்கோழி குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஈரோடு ஸ்டைல் நாட்டுக்கோழி குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
* கிராம்பு - 4
* ஏலக்காய் - 1
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கல்பாசி - சிறிது
* அன்னாசிப்பூ - 1
* பட்டை - சிறிய துண்டு
* மிளகு - 15
* கறிவேப்பிலை - 2 கொத்து
* சின்ன வெங்காயம் - 2 கைப்பிடி
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* நாட்டுக்கோழி - 1 கிலோ
* குழம்பு மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
வதக்கி அரைப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
* இஞ்சி - 2 இன்ச்
* பூண்டு - 8 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 150 கிராம்
* கொத்தமல்லி - சிறிது
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* தேங்காய் - 1/4 மூடி
தாளிப்பதற்கு...
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* பூண்டு - 3 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4 (விதைகளை நீக்கியது)
செய்முறை:
* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, அன்னாசிப்பூ, கல்பாசி,
மிளகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் 2 கைப்பிடி சின்ன வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட்
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளி, கொத்தமல்லி, சுவைக்கேற்ப உப்பு மற்றும்
மஞ்சள் தூளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து நாட்டுக்கோழியை சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறி விட்டு வேக
வைக்க வேண்டும்.
* பின் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து கிளறி, நாட்டுக்கோழி மூழ்கும்
அளவில் நீரை ஊற்றி, கொதி வந்ததும், குக்கரை மூடி 5 விசில் விட்டு,
பின் குறைவான தீயில் வைத்து 2 நிமிடம் வேக வைத்து அடுப்பை அணைத்துவிட
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கிளறி விட வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி, சோம்பு, கசகசா, இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, மிளகு, சீரகம்
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் 150 கிராம் சின்ன வெங்காயத்தை சேர்த்து, நன்கு கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கொத்தமல்லியை சேர்த்து கிளறி, மல்லித் தூள் சேர்த்து
பிரட்ட வேண்டும். அதன் பின் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறி
இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் குக்கரில் இந்த மசாலாவை சேர்த்து, ஜாரில் சிறிது நீரை
ஊற்றி அலசி ஊற்றி கிளறி, குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து, உப்பு
சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி, 5 நிமிடம் கொதிக்க
வைக்க வேண்டும்.
* இறுதியாக இடிக்கும் உரலில் சீரகம், பூண்டு, கறிவேப்பிலையை சேர்த்து
நன்கு இடித்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,
அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், இடித்து வைத்துள்ள
பொருட்களை சேர்த்து, அத்துடன் விதைகளை நீக்கிய வரமிளகாயை சேர்த்து
நன்கு வதக்கி இறக்கி, கொதித்துக் கொண்டிருக்கும் குழம்புடன் சேர்த்து
கிளறி இறக்கினால், சுவையான ஈரோடு ஸ்டைல் நாட்டுக்கோழி குழம்பு
தயார்.



Click it and Unblock the Notifications