Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சன்டே ஸ்பெஷல் - சுவையான... ஈரோடு நல்லாம்பட்டி சிக்கன் ரோஸ்ட்
Erode Nallampatti Chicken Roast: இந்த வார விடுமுறையில் உங்கள் வீட்டில் சிக்கன் செய்யப் போகிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை வீட்டில் செய்து சுவைக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் ஈரோடு நல்லாம்பட்டி சிக்கன் ரோஸ்ட் செய்யுங்கள்.
இந்த சிக்கன் ரோஸ்ட் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக இந்த ரெசிபி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு ஈரோடு நல்லாம்பட்டி சிக்கன் ரோஸ்ட் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஈரோடு நல்லாம்பட்டி சிக்கன் ரோஸ்ட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 750 கிராம்
* நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* கிராம்பு - 5
* பட்டை - 2 இன்ச்
* வரமிளகாய் - 8 (விதைகளை நீக்கிவிடவும்)
* கறிவேப்பிலை - சிறிது
* பூண்டு - 10 பல்
* சின்ன வெங்காயம் - 1 கப் (நறுக்கியது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* இஞ்சி - 1 டீஸ்பூன் (துருவியது)
* தண்ணீர் - 1/2 கப்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கிராம்பு, பட்டை, சோம்பு, வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* வெங்காயம் நன்கு வதங்கியதும், அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள்,
சீரகத் தூள், மல்லித் தூள் சேர்த்து சில நொடிகள் நன்கு வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சியை சேர்த்து வதக்கி, பின் தக்காளியை சேர்த்து
நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் சிக்கனை கழுவி சேர்த்து, மசாலா நன்கு சிக்கனில் ஒன்று
சேரும் வரை நன்கு கிளறி, உப்பு தூவி நன்கு கிளறி, 1/2 கப் நீரை ஊற்றி
கிளறி, குறைவான தீயில் வைத்து 20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* சிக்கனில் உள்ள நீர் முற்றிலும் வற்றி, சிக்கன் நன்கு ரோஸ்ட் ஆன
பின் மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான
ஈரோடு நல்லாம்பட்டி சிக்கன் ரோஸ்ட் தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications