Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இறால் வாங்குனா.. இந்த மாதிரி செஞ்சு சாப்பிடுங்க.. அப்புறம் பாருங்க இப்படி தான் செய்வீங்க..
Eral Thokku Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு இறால் ரொம்ப பிடிக்குமா? லீவு நாட்கள் வந்தாலே இறாலை வாங்கி பலவாறு சமைத்து சாப்பிடுவீர்களா? பெரும்பாலும் இறாலை ப்ரை செய்து தான் சாப்பிடுவீர்களா? விடுமுறை நாட்களில் உங்கள் சமையலை சிம்பிளாக முடிக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் இறாலை வாங்கி தொக்கு செய்யுங்கள்.
அப்படி தொக்கு செய்து ரசம் வைத்துவிடுங்கள் போதும், வேற லெவலில் இருக்கும். உங்களுக்கு இறால் தொக்கு அவ்வளவு சிறப்பாக செய்ய வராதா? அப்படியென்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு செய்யுங்கள். இந்த மாதிரி தொக்கு செய்தால், பின் அடிக்கடி செய்வீர்கள். ஏனெனில் அந்த அளவில் ஈஸியாகவும், ருசியாகவும் இருக்கும்.

உங்களுக்கு இறால் தொக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இறால் தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* இறால் - 1/2 கிலோ
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
தொக்குவிற்கு...
* எண்ணெய் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
* கிராம்பு - 4
* பட்டை - 2 துண்டு
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய பூண்டு - 2
* சின்ன வெங்காயம் - 150 கிராம்
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* குழம்பு மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1/2 டம்ளர்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு கிண்ணத்தில் கழுவிய இறாலை எடுத்து, அத்துடன் மிளகாய்
தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து
பிரட்டி, மூடி வைத்து 45 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு 2 பெரிய பூண்டுகளை எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு தட்டி
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் சின்ன வெங்காயஙத்தின் தோலை நீக்கிவிட்டு, அவற்றையும்
தட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கிராம்பு, பட்டை, சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் தட்டி வைத்துள்ள பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை
சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, மென்மையாகும்
வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் குழம்பு மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு
சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து 5 நிமிடம் தொடர்ந்து
கிளறி விட வேண்டும்.
* அப்படி கிளறும் போது இறால் லேசாக நீர் விட்டு வரும். பின் அதில் 1/2
டம்ளர் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் இறாலை நன்கு வேக
வைக்க வேண்டும்.
* இறால் நன்கு வெந்ததும், அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறினால்,
சுவையான இறால் தொக்கு தயார்.



Click it and Unblock the Notifications