Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
எனோகி காளான் ஆம்லெட்
2021-இல் இந்தியாவில் மக்கள் கூகுளில் தேடி உணவுகளின் பட்டியலில் முதல் இடத்தில் எனோகி காளான் உள்ளது. நீங்களும் எனோகி காளானை எப்படி சமைத்து சாப்பிடலாம் என்பதை தெரிந்து கொள்ள விரும்பினால், இதைக் கொண்டு ஆம்லெட் செய்யுங்கள்.
காளானில் பல வெரைட்டிகள் உள்ளன. காளான்கள் இறைச்சிகளைப் போன்றே அற்புதமான சுவையைக் கொண்டவை. 2021 ஆம் ஆண்டில் ஏராளமானோர் எனோகி காளானை எப்படி சமைத்து சாப்பிடுவது என்று தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியுள்ளனர். அதுவும் இந்தியாவில் உள்ள மக்கள் கூகுளில் தேடி உணவுகளின் பட்டியலில் முதல் இடத்தில் எனோகி காளான் உள்ளது. நீங்களும் எனோகி காளானை எப்படி சமைத்து சாப்பிடலாம் என்பதை தெரிந்து கொள்ள விரும்பினால், இதைக் கொண்டு ஆம்லெட் செய்யுங்கள். இந்த எனோகி காளான் ஆம்லெட் செய்வது மிகவும் ஈஸி மற்றும் அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய சுவையைக் கொண்டது.

உங்களுக்கு எனோகி காளான் ஆம்லெட் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே எனோகி காளான் ஆம்லெட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எனோகி காளான் - 1 கட்டு
* முட்டை - 3
* ஸ்பிரிங் ஆனியன் - சிறிது (பொடியாக நறுக்கியது)
* சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் எனோகி காளானை எடுத்து, அதன் அடிப்பகுதியை வெட்டி நீக்கிவிட வேண்டும். இந்த காளான் கொத்தாக இருப்பதால், ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி, அதில் எனோகி காளானை பிரித்துப் போட்டு, சிறிது உப்பு தூவி பிரட்டி ஒரு 5 நிமிடம் ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன், வெங்காயம், உப்பு மற்றும் சோயா சாஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு நாண்-ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் எனோகி காளானை பேன் முழுவதும் தனித்தனியாக பிரித்து வட்டமாக பூ போன்று பரப்பி வைக்க வேண்டும்.
* பின் அதன் மேல் சிறிது எண்ணெய் ஊற்ற வேண்டும். காளானில் இருந்து நீர் வெளியேறி காளான் ஓரளவு வெந்தது போன்று தெரியும் போது, முட்டை கலவையை மேலே ஊற்றி பரப்பி விட்டு சிறிது எண்ணெய் ஊற்ற வேண்டும்.
* முட்டை வெந்தது போன்று தெரியும் போது, ஆம்லெட்டை திருப்பிப் போட்டு வேக வைத்து எடுத்தால், சுவையான எனோகி காளான் ஆம்லெட் தயார்.



Click it and Unblock the Notifications