Latest Updates
-
Skin Care: முகப்பரு இல்லாத கண்ணாடி மாதிரி சருமம் வேண்டுமா? அப்ப இந்த தானியங்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க -
தீபாவளி அன்று பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப தக்காளி வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
Diwali 2026: தீபாவளி அன்று ஏன் 13 விளக்குகளை ஏற்ற வேண்டும்? அவற்றை எந்தெந்த இடத்தில் வைக்க வேண்டும்? -
உலகம் முழுக்க 108 ஏன் மிகவும் புனிதமான எண்ணாக கருதப்படுகிறது தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
வாஸ்து படி வீட்டை பெருக்கும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செய்யாதீங்க - இல்லனா வீட்டு அதிர்ஷ்டமே போயிரும் -
தீபாவளியில் உருவாகும் 2 சக்திவாய்ந்த ராஜயோகங்கள்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
18 மாதங்களுக்கு பின் ராகு மகர ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
அவரைக்காயை எப்பவும் பொரியல் செய்யாம.. இப்படி ஒருடைம் கிரேவி செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
15 பல் பூண்டு இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் பூண்டு பப்புவை செய்யுங்க - சாதத்தில் ஊற்றி சாப்பிட அமிர்தமா இருக்கும -
அடிக்கடி நெஞ்செரிச்சல், அஜீரணமா? வயிற்றுப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்! எச்சரிக்கும் டாக்டர்!
எந்த காய்கறியும் தேவைப்படாத இந்த பாயாவை ஒருதடவை செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்ட்டகாசமா இருக்கும்
Empty Paya Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் இட்லி, தோசை போன்றவற்றுக்கு பொதுவாக சட்னி அல்லது சாம்பார்தான் பிரதான சைடிஷாக இருக்கும். அதேபோல ஆப்பம், இடியாப்பம் போன்றவற்றுக்கு தேங்காய்ப்பால் அல்லது பாயாதான் சைடிஷாக இருக்கும். பொதுவாக பாயா ஆட்டுக்காலில்தான் செய்வார்கள். ஏன் ஆட்டுக்காலை வைத்து மட்டும் தான் பாயா செய்ய வேண்டுமா என்ன? சைவத்தில் சொல்லப்போனால் எந்த காய்கறியும் இல்லாமலேயே அட்டகாசமான எம்டி பாயா செய்யலாம்.

இந்த எம்டி பாயா ஆப்பம், இடியாப்பம் மட்டுமின்றி இட்லி, தோசை மற்றும் சப்பாத்திக்கும் அட்டகாசமாக இருக்கும். இந்த சூப்பரான பாயா செய்வதற்கு எளிதானது மற்றும் சுவையானது. இந்த பாயாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பாயாவை தொட்டு சாப்பிடக்கூடாது, அப்படியே இட்லி, தோசையை ஊற்றி அதில் ஊறவைத்து சாப்பிட வேண்டும்.
உங்களுக்கு சுவையான எம்டி பாயாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே எம்டி பாயாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைக்க வேண்டியவை:
- 1/2 கப் தேங்காய்
- 1 ஸ்பூன் சோம்பு
- 2 பச்சை மிளகாய்
- 1/2 ஸ்பூன் மிளகு
- 1 இன்ச் பட்டை
- 1 ஸ்பூன் சீரகம்
- 4 கிராம்பு
- 2 ஏலக்காய்
- 1 ஸ்பூன் மல்லி விதைகள்
- 1/2 ஸ்பூன் கசகசா
- 3 முந்திரி பருப்புகள்
- 1/2 தேக்கரண்டி கடலை எண்ணெய்
- சிறிதளவு கல்பாசி
- 2 ஸ்பூன் புதினா இலைகள்
- 2 ஸ்பூன் கொத்தமல்லி இலைகள்
- 1/2 ஸ்பூன் கரம் மசாலா
- அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 கப் தண்ணீர்
சால்னா வைக்க:
- 1 ஸ்பூன் கடலை எண்ணெய்
- 1 பிரிஞ்சி இலை
- 1 1/2 கப் நறுக்கிய வெங்காயம்
- 3/4 கப் தக்காளி
- 1 பச்சை மிளகாய்
- 1/2 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
- தேவையான அளவு தண்ணீர்
- ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலைகள்
- சிறிது மஞ்சள் தூள்
- 1 கொத்து கறிவேப்பிலை
- தேவையான அளவு உப்பு
செய்முறை:
- முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடாக்கி வருது அரைக்க வேண்டிய பொருட்களை அனைத்துப் பொருட்களையும் ஒவ்வொன்றாக சேர்த்து வறுக்கவும்.
- அதன்பின் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் தேங்காய் சேர்த்து வதக்கவும்.
- வதக்கியப் பொருட்களை ஆறவைத்து, புதினா இலைகள், கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து கிளறவும்.
- வதக்கிய பொருட்கள் ஆறியதும் அதை மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், கரம் மசாலா மற்றும் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
- ஒரு குக்கரில் எண்ணெயைச் சூடாக்கி, அதில் பிரியாணி இலையைச் சேர்க்கவும்.
- அதன்பின் நறுக்கிய வெங்காயம், உப்பு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து, அவை கண்ணாடி பதத்திற்கு மாறும் வரை வதக்கவும்.
- பின்னர் கீறிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது மற்றும் நறுக்கிய தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து, அவை மென்மையாகும் வரை வதக்கவும்.
- அதன்பின் கறிவேப்பிலை, அரைத்து வைத்த கலவை மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- பாயாவை நன்கு கொதிக்க வைக்கவும். குக்கரை மூடி வைத்து 2 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
- அழுத்தம் வெளியேறியதும் மூடியைத் திறந்து கொத்தமல்லி இலைகள் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்தால் சுவையான எம்டி பாயா ரெடி!



Click it and Unblock the Notifications
