Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
1/2 கப் எள்ளு இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. சத்தானதும் கூட..
Ellu Chutney Recipe In Tamil: காலையில் பெரும்பாலும் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் டிபனாக இருக்குமா? அந்த இட்லி, தோசைக்கு உங்கள் வீட்டில் உள்ளோர் சட்னியை தான் விரும்பி சாப்பிடுவார்களா? அதுவும் எப்போதும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என்று தான் செய்வீர்களா? சற்று வித்தியாசமான சுவையைக் கொண்ட, அதே சமயம் சத்தான ஒரு சட்னியை செய்ய நினைக்கிறீர்களா?
அப்படியானால் எள்ளு சட்னியை செய்யுங்கள். இந்த எள்ளு சட்னி, உடலுக்கு வலிமையைத் தரும், உடல் சோர்வை போக்கும், சளி, இருமலில் இருந்து விடுவிக்கும். ஒருமுறை இந்த சட்னியை செய்தால், உங்கள் வீட்டில் உள்ளோர் அடிக்கடி இந்த சட்னியை கேட்பார்கள். முக்கியமாக இந்த சட்னியை துவையல் போன்று கெட்டியாக அரைத்து, சூடான சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம்.

உங்களுக்கு எள்ளு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே எள்ளு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெள்ளை எள்ளு விதைகள் - 1/2 கப்
* எண்ணெய் - 1 ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்
* மிளகு - 1/4 ஸ்பூன்
* சீரகம் - 12 சிட்டிகை
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* பூண்டு - 5 பல்
* புளி - சிறிது
* கறிவேப்பிலை - 2 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 3
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எள்ளு விதைகளை
சேர்த்து நன்கு மணம் வந்து, லேசாக நிறம் மாறும் வரை வறுத்து இறக்கி,
ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி
சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, சீரகம்,
பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் பூண்டு பற்களை சேர்த்து, அத்துடன் புளி, கறிவேப்பிலை,
கொத்தமல்லியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் துருவிய தேங்காயை 3 டேபிள் ஸ்பூன் சேர்த்து, 3
வரமிளகாயையும் சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன்
எள்ளு விதைகளையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பையும் சேர்த்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் போட்டு, ஜாரில் நீரை ஊற்றி
அலசி சட்னியுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய்
சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான எள்ளு
சட்னி தயார்.



Click it and Unblock the Notifications