Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும்.
முட்டை சேர்க்காமல் குக்கரில் வென்னிலா கேக் செய்வது எப்படி-ன்னு தெரியுமா?
Eggless Vanilla Cake Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வெறும் பஜ்ஜி, போண்டா செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமாக ஏதாவது வீட்டில் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் கேக்கை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் வென்னிலா கேக் செய்யுங்கள்.
கேக் செய்வதற்கு மைக்ரோ ஓவன் தான் வேண்டும் என்பதில்லை. குக்கரைக் கொண்டே அட்டகாசமான சுவையில் கேக் செய்யலாம். இந்த வென்னிலா கேக் செய்வதற்கு வீட்டில் உள்ள ஒருசில பொருட்களே போதுமானது. முக்கியமாக இந்த கேக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு வென்னிலா கேக்கை குக்கரில் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வென்னிலா கேக்கின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மைதா - 1 1/2 கப்
* சர்க்கரை - 3/4 கப்
* பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
* பேக்கிங் பவுடர் - 1 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1 சிட்டிகை
* தயிர் - 1/2 கப்
* பால் - 1/2 கப்
* எண்ணெய் - 1/2 கப்
* வென்னிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, சூடேற்ற வேண்டும்.
* பின் அதில் ஸ்டேண்ட் வைத்து, குக்கர் மூடியில் உள்ள கேஸ்கட்டை
நீக்கிவிட்டு, குக்கரை மூடி விசில் போடாமல் 10 நிமிடம் சூடேற்ற
வேண்டும். அதற்குள் கேக் மாவை தயாரித்துக் கொள்ள வேண்டும்.
* அதற்கு கேக் பேன்/பேக்கிங் ட்ரேயை எடுத்து, அதில் சிறிது வெண்ணெய்
தடவி, மேலே பார்ச்மெண்ட் பேப்பரை விரித்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு பௌலில் மைதா மற்றும் சர்க்கரையை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* அதன் பின், அதில் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு, எண்ணெய்,
வென்னிலா எசன்ஸ், பால், தயிர் ஊற்றி ஸ்படுலா பயன்படுத்தி கட்டிகளின்றி
நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து கிளறி வைத்துள்ள மாவை கேக் ட்ரேயில் ஊற்றி, குக்கரைத்
திறந்து, அதனுள் கேக் ட்ரேயை வைத்து, குக்கரை மூடி மிதமான தீயில்
வைத்து 50-55 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும்.
* கேக் வெந்துவிட்டதா என்பதை ஒரு டூத் பிக் குச்சியைக் கொண்டு குத்தி
பார்க்க வேண்டும். குச்சியில் மாவு ஒட்டாவிட்டால், கேக் தயார் என்று
அர்த்தம்.
* அதன் பின் ஒரு தட்டில், இந்த கேக் ட்ரேயை கவிழ்த்து போட்டு,
துண்டுகளாக்கினால், வென்னிலா கேக் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications









