Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
சப்பாத்தி, பூரிக்கு ஏற்ற ருசியான... முட்டை மசாலா செய்வது எப்படி?
Egg Slice Masala Recipe: இன்று இரவு உங்கள் வீட்டில் டின்னருக்கு சப்பாத்தி செய்ய போறீங்களா? அந்த சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வது என்று யோசிக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் நல்ல காரசாரமான மற்றும் சுவையான ஒரு சைடு டிஷ் கேட்கிறார்களா?
அப்படியானால் வீட்டில் முட்டை இருந்தால், அதைக் கொண்டு வித்தியாசமான சுவையைக் கொண்ட முட்டை மசாலாவை செய்து கொடுங்கள். இந்த முட்டை மசாலாவில் முட்டைகளை துண்டுகளாக்கி, பொரித்த பின் மசாலாவில் சேர்க்க வேண்டும்.

இந்த முட்டை மசாலா சப்பாத்தி, பூரி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
உங்களுக்கு முட்டை மசாலா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முட்டை - 6 (வேக வைத்து, தோலுரித்தது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 3/4 டேபிள் ஸ்பூன்
* சீரகத் தூள் - 1 சிட்டிகை
* சோம்புத் தூள் - 1 சிட்டிகை
* கரம் மசாலா - 1 சிட்டிகை
* புளி பேஸ்ட் - 1/2 டேபிள் ஸ்பூன் (விருப்பமிருந்தால்)
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
* எண்ணெய் - 3-4 டேபிள் ஸ்பூன்
முட்டை கோட்டிங்கிற்கு...
* முட்டை - 2
* பால் - 4 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் வேக வைத்த முட்டைகளை வட்டத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு பௌலில் கோட்டிங்கிற்கு கொடுத்துள்ள இரண்டு முட்கைளை
உடைத்து ஊற்றி, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் பால், மிளகுத் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பிற்கு ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், வெட்டி வைத்துள்ள முட்டைத் துண்டுகளை எடுத்து முட்டை
பால் கலவையில் நனைத்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்து முட்டை
துண்டுகளையும் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தைப் போட்டு
வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து 3 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சோம்பு தூள், மல்லித் தூள்,
சீரகத் தூள் சேர்த்து நன்கு கிளறி, தக்காளியை சேர்த்து மென்மையாகும்
வரை நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் 1 1/2 கப் நீரை ஊற்றி, புளி பேஸ்ட்டை சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு தூவி கலந்து குறைவான தீயில் வைத்து ஒரு கொதி
வந்ததும், பொரித்த முட்டை துண்டுகளை சேர்த்து 8-10 நிமிடம் மிதமான
தீயில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* நன்கு பச்சை வாசனை போக கொதித்ததும், கரம் மசாலாவைத் தூள் கிளறி
இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான முட்டை மசாலா தயார்.
Image Courtesy: sailusfood



Click it and Unblock the Notifications









