Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
3 முட்டையும், 1 கப் சேமியாவும் இருந்தா.. 10 நிமிஷத்துல சூப்பர் டிபன் செய்யலாம்... எப்படின்னு பாருங்க..
Egg Semiya Dosa Recipe In Tamil: காலையில் வீட்டில் தோசை சுட மாவு இல்லையா? டக்கென்று காலையில் ஏதாவது டிபன் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில் முட்டையும், சேமியாவும் உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டு பொருட்களையும் கொண்டு அட்டகாசமான சுவையில் தோசை செய்யுங்கள்.
இந்த முட்டை சேமியா தோசை அப்படியே சாப்பிடவும் நன்றாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். சொல்லப்போனால் இதை 10 நிமிடத்தில் டக்கென்று செய்து முடிக்கலாம். முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு முட்டை சேமியா தோசையை எப்படி வெய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை சேமியா தோசை ரெசிபியின் எளிய செய்முளை கொடுக்கப்ட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருததுக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முட்டை - 3
* சேமியா - 1 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சிறிது
* எண்ணெய் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* குழம்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சோம்பு தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் சிறிது உப்பு
சேர்த்து நீர் நன்கு சூடானதும் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
* பின் அந்த நீரில் சேமியாவை சேர்த்து 1 நிமிடம் கிளறி, நீரை
வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரால் ஒருமுறை அலசிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து லேசாக நிறம்
மாறும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் குழம்பு மிளகாய் தூள், மிளகுத் தூள், சோம்புத் தூள்,
சீரகத் தூள், மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து
வத்க்கி இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் வதக்கி
வைத்துள்ள பொருட்கள் மற்றும் வேக வைத்துள்ள சேமியாவை சேர்த்து நன்கு
கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து
வைத்துள்ள கலவையை கொஞ்சம் ஊற்றி, தோசை போன்று பரப்பி, எண்ணெய் ஊற்றி,
முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான முட்டை சேமியா தோசை
தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications

