Latest Updates
-
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க..
1 முட்டையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா காலையில் இந்த டிபனை செஞ்சு கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க..
Egg Potato Omelette Recipe In Tamil: காலையில் வீட்டில் எப்போதும் இட்லி, தோசை செய்து போடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான அதே சமயம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய காலை உணவை தேடிக் கொண்டிருக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் முட்டையும், உருளைக்கிழங்கும் இருந்தால், அவற்றைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ஒரு காலை டிபனை செய்யுங்கள். அது தான் முட்டை உருளைக்கிழங்கு ஆம்லெட். இதுவரை வெறும் வெங்காயத்தை சேர்த்து முட்டையை செய்வீர்களானால், அடுத்தமுறை அத்துடன் உருளைக்கிழங்கை சேர்த்து செய்யும் போது சுவை அள்ளும்.

உங்களுக்கு முட்டை உருளைக்கிழங்கு ஆம்லெட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை உருளைக்கிழங்கு ஆம்லெட்டின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்துசெய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உக்ள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பெரிய உருளைக்கிழங்கு - 1
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* முட்டை - 1
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, அதை துருவிக் கொள்ள
வேண்டும்.
* பின் துருவிய உருளைக்கிழங்கை நீரில் 2 முறை அலசி, அதில் உள்ள
அதிகப்படியான நீரைப் பிழிந்துவிட வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் குடைமிளகாயை சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கி குளிர
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் உப்பு, மிளகுத் தூள், மஞ்சள் தூள் மற்றும் வதக்கி
குளிர வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் கொத்தமல்லியையும்
தூவி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கலந்து வைத்துள்ளதை அப்படியே பேனில் ஊற்றி பரப்பி, மூடி
வைத்து மிதமான தீயில் வைத்து 2 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின் அதை
அப்படியே திருப்பிப் போட்டு, மூடி வைத்து 2 நிமிடம் வேக வைத்து
எடுத்தால், சுவையான முட்டை உருளைக்கிழங்கு ஆம்லெட் தயார்.



Click it and Unblock the Notifications
