Latest Updates
-
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா?
சப்பாத்திக்கு ஒருவாட்டி இப்படி முட்டை பெப்பர் கிரேவியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
Egg Pepper Gravy For Chapati: உங்கள் வீட்டில் நைட் பெரும்பாலும் சப்பாத்தி தான் செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு ஒவ்வொரு நாளும் வித்தியாசமான சைடு டிஷ்ஷை வீட்டில் உள்ளோர் எதிர்பார்க்கிறார்களா? உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்திக்கு முட்டை கிரேவியை செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை முட்டை கிரேவி செய்வதாக இருந்தால், முட்டை பெப்பர் கிரேவியை செய்யுங்கள்.
இந்த பெப்பர் கிரேவியில் அனைத்தையும் அரைத்து சேர்ப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக ஒருமுறை இப்படி கிரேவி செய்தால், அடிக்கடி இப்படி தான் செய்து கொடுக்க கேட்பார்கள். அந்த அளவில் சுவை பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு முட்டை பெப்பர் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை பெப்பர் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வேக வைத்த முட்டை - 7
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* மல்லி - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 1
* கல்பாசி - 1 துண்டு
* அன்னாசிப்பூ - 1
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 10
* தக்காளி - 1 (நறுக்கியது)
* இஞ்சி - 2 துண்டு
* பூண்டு - 5 பல்
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 2
* உப்பு - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், மல்லி,
மிளகு, சோம்பு, பட்டை, கிராம்பு, கல்பாசி, ஏலக்காய், அன்னாசிப்பூ
சேர்த்து, அத்துடன் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி நல்ல மணம் வரும் வரை
வறுக்க வேண்டும்.
* பின்னர் அதில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு பற்கள், தக்காளி
சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம், வரமிளகாய் மற்றும்
கறிவேப்பிலை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின் அதில் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு 1
நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வேக வைத்த முட்டைகளை சேர்த்து 1 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி,
கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி, நன்கு 7-8 நிமிடம் பச்சை வாசனை
போக கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான முட்டை
பெப்பர் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications