Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
மீந்து போன சப்பாத்தி இருந்தா.. முட்டை சேர்த்து இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. நொடியில் காலியாயிடும்...
Egg Kothu Chapathi Recipe In Tamil: உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்து மீந்து போய்விட்டதா? அப்படி மீந்து போன சப்பாத்தியை தூக்கி போட மனமில்லையா? அதைக் கொண்டு ஒரு சுவையான ரெசிபியை செய்ய நினைத்தால் முட்டை கொத்து சப்பாத்தியை செய்து சாப்பிடுங்கள். இப்படி சப்பாத்தியை செய்யும் போது, அதற்கு சைடு டிஷ் எதுவும் தேவைப்படாது.
மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். உங்கள் பிள்ளைகள் ஸ்பெஷலாக ஏதாவது செய்து கொடுக்குமாறு கேட்டால், சப்பாத்தியை செய்து, முட்டை சேர்த்து இப்படி முட்டை கொத்து சப்பாத்தியை செய்யுங்கள். இந்த முட்டை கொத்து சப்பாத்தி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு முட்டை கொத்து சப்பாத்தியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை கொத்து சப்பாத்தி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீந்து போன சப்பாத்தி - 3
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* புதினா - சிறிது
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* மிளகாய் தூள் - 1.2 டீஸ்பூன்
* கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
* ஏதாவது குழம்பு/குருமா - 1 கப்
* முட்டை - 4
செய்முறை:
* முதலில் சப்பாத்தியை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை மற்றும்
புதினாவை சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலாவை சேர்த்து வதக்க
வேண்டும்.
* பிறகு துண்டுகளாக்கி வைத்துள்ள சப்பாத்தியை சேர்த்து 3-4 நிமிடம்
நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் வீட்டில் செய்து வைத்துள்ள எந்த குழம்பு அல்லது
குருமாவாக இருந்தாலும், அதை ஒரு கப் ஊற்றி நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின்பு அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கிளறி விட்டு
இறக்கினால், சுவையான முட்டை கொத்து சப்பாத்தி தயார்.



Click it and Unblock the Notifications