Latest Updates
-
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க.. -
75 ஆண்டுகளாக பயணிகளிடம் டிக்கெட்டே வாங்காமல் இயங்கும் இந்தியாவின் ஒரே ரயில் எது தெரியுமா?
6 முட்டை இருந்தா.. காலையில இப்படி ஒரு டிபன் செய்யுங்க.. சத்தானதும், சுவையானதும் கூட..
Egg Idli Recipe In Tamil: காலையில் என்ன டிபன் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் குழந்தைகள் இட்லி, தோசை செய்து கொடுத்தால் சாப்பிட மறுக்கிறார்களா? அப்படியானால் வீட்டில் முட்டை இருந்தால், அதைக் கொண்டு ஒரு வித்தியாசமான சுவையில் டிபன் செய்யுங்கள். அது தான் முட்டை இட்லி. இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
உங்களுக்கு முட்டை இட்லியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை இட்லி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* முட்டை - 6
* காய்ச்சாத பால் - 4 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
வதக்குவதற்கு...
* நெய் - 1 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 2 (துருவியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் 6 முட்டைகளை உடைத்து ஊற்றி, நன்கு அடித்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதில் காய்ச்சாத பால், மிளகுத் தூள், சுவைக்கேற்ப உப்பு
மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும்,
பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் மற்றும் துருவிய
கேரட்டை சேர்க்க வேண்டும்.
* பின் அதில் மிளகுத் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து 2 நிமிடம்
வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் வதக்கியதை முட்டையுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள
வேண்டும்.
* பிறகு இட்லி பாத்திரத்தில் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, நீரை
கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் நன்கு கொதித்ததும், இட்லி தட்டில் எண்ணெய் தடவி, அதில் முட்டை
கலவையை இட்லிகளாக ஊற்றி, இட்லி பாத்திரத்தில் வைத்து, 10 நிமிடம் வேக
வைத்து எடுத்தால், சுவையான முட்டை இட்லி தயார்.
Image Courtesy: Akshaya. com



Click it and Unblock the Notifications
