Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சப்பாத்தி, தோசைக்கு சிறந்த சைடிஷான முட்டை பட்டர் மசாலா ரெசிபி... இத செஞ்சு பாருங்க... எல்லோரும் அசந்துருவாங்க!
Egg Butter Masala Recipe: இந்திய வீடுகளில் இட்லி, தோசைக்குப் பிறகு அதிகமாக செய்யப்படும் இரவு உணவென்றால் அது சப்பாத்திதான். சப்பாத்தி சாப்பிட்டால் எடை குறையும் என்ற நம்பிக்கை நிலவுவதும் இதற்கு முக்கிய காரணமாகும். சப்பாத்திக்கு பொதுவா சிறந்த சைடிஸ் என்றால் அது உருளைக்கிழங்கு குருமாதான். சில சிறப்பு சந்தர்ப்பங்களில் சிக்கன் அல்லது மட்டன் குருமா செய்யப்படும்.
சப்பாத்தி மற்றும் பனீர் பட்டர் மசாலா என்பது மிகவும் பிரபலமான காம்போவாகும். ஆனால் முட்டை பட்டர் மசாலாவை நீங்கள் இதற்கு முன்னால் முயற்சித்து உள்ளீர்களா? வேகவைத்த முட்டைகளை வைத்து செய்யப்படும் இந்த சுவையான மற்றும் எளிதான முட்டை பட்டர் மசாலா சப்பாத்தி, பூரி மற்றும் தோசைக்கு சிறந்து சைடிஷாக இருக்கும். இந்த பதிவில் முட்டை பட்டர் மசாலா எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- வேகவைத்த முட்டை - 5
- வெங்காயம் - 2
- தக்காளி - 3
- இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- முந்திரி பருப்பு - 10
- மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
- வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- பட்டை, ஏலக்காய், கிராம்பு - தாளிக்க
- உப்பு - தேவைக்கு ஏற்ப
செய்முறை:
- தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். முட்டையை வேக
வைத்து ஓட்டை நீக்கி விட்டு கத்தியால் கீறி வைக்கவும்.
-வாணலியில் வெண்ணெய்விட்டு அத உருகியதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு,
சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை
வதக்கவும்.
- அடுத்து முந்திரி பருப்பு சேர்க்கவும். பின்னர், பொடியாக நறுக்கிய
தக்காளி, உப்பு சேர்த்து குழைய வேக வைக்கவும்.
-அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை
போகும் வரை வதக்கிவிட்டு இறக்கி ஆறவைக்கவும்.
- பின்னர் இந்த கலவையை மிக்ஸி ஜாரில் போட்டு விழுதாக அரைத்துக்
கொள்ளவும்.
- மீண்டும் மற்றொரு வாணலியில், வெண்ணெய் சேர்த்து உருகியதும் இஞ்சி
பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பிறகு, அரைத்து வைத்த விழுது, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
கூடவே, முட்டையை நான்கு பக்கத்தில் கீறிவிட்டு கலவையுடன் சேர்த்து
கிளறி சுமார் 10 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
- இந்த கலவை கிரேவி பதத்திற்கு வந்ததும் இறக்கிவிடவும்.
- பொடியாக நொறுக்கிய கொத்தமல்லி அல்லது கஸ்தூரி மேத்தி போட்டு
இறக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான முட்டை பட்டர் மசாலா ரெடி!



Click it and Unblock the Notifications