Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
2 முட்டை வெச்சு ஈவ்னிங் நேரத்துல 10 நிமிடத்தில் இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Egg Bajji Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் சாப்பிட ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் 2 முட்டை உள்ளதா? அப்படியானால் அந்த முட்டை கொண்டு அட்டகாசமான சுவையில் பஜ்ஜியை செய்து கொடுங்கள். இந்த முட்டை பஜ்ஜி வழக்கமாக செய்வதைப் போன்று இல்லாமல், ஆம்லெட் செய்து பஜ்ஜியை செய்வதால் சுவை பிரமாதமாக இருக்கும். மேலும் இந்த பஜ்ஜி 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.
உங்களுக்கு முட்டை பஜ்ஜியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை பஜ்ஜி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
ஆம்லெட் செய்வதற்கு...
* முட்டை - 2
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - சிறிது
* உப்பு - சிறிது
பஜ்ஜி மாவிற்கு...
* கடலை மாவு - 1 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சிறிது
* கரம் மசாலா - 2 சிட்டிகை
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* ஆப்ப சோடா - 1 சிட்டிகை
* கொத்தமல்லி - சிறிது
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி, அத்துடன் மஞ்சள்
தூள், மிளகுத் தூள், மிளகாய் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து
நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் கலந்து வைத்துள்ள
முட்டையை கொஞ்சம் கொஞ்சமாக சிறுசிறு ஆம்லெட் போன்று ஊற்றி எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகுத் தூள், உப்பு,
கரம் மசாலா, பெருங்காயத் தூள், ஆப்ப சோடா சேர்த்து சிறிது நீரை ஊற்றி
நன்கு பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் கொத்தமல்லியைத் தூவி கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், முட்டை ஆம்லெட்டுகளை எடுத்து பஜ்ஜி
மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால்,
சுவையான முட்டை பஜ்ஜி தயார்.



Click it and Unblock the Notifications



