Latest Updates
-
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
10 நிமிசத்துல பருப்பே இல்லாம் இட்லி, தோசைக்கு ஈஸியான சாம்பாரை செய்யணுமா? இந்த மாதிரி செஞ்சு பாருங்க
Easy Sambar Recipe in Tamil: காலையில் இட்லி, தோசைக்கு சட்னி செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் இன்று சாம்பார் செய்யுங்கள். அதுவும் பருப்பே இல்லாத வித்தியாசமான சாம்பார் செய்யுங்கள். இந்த பருப்பு இல்லாத சாம்பார் இட்லி, தோசை, சாதம் என அனைத்துடனும் பொருத்தமாக இருக்கும். முக்கியமாக இந்த சாம்பார் செய்வதற்கு 10 நிமிடம் போதும்.

மேலும் இந்த சாம்பார் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். இந்த ஈஸியான சாம்பார் வைக்க ஒரு ஸ்பெஷல் விழுதை அரைத்தால் போதும். இந்த வித்தியாசமான சாம்பாரை டக்குனு குக்கரிலேயே செய்து விடலாம்.
உங்களுக்கு வித்தியாசமான பருப்பு இல்லாத சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இந்த ஈஸியான சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- நறுக்கியவெங்காயம் - 1/2 கப்
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கறிவேப்பிலை - சிறிதளவு
- கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு
- கடுகு - 1/2 ஸ்பூன்
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- தண்ணீர் - தேவையான அளவு
அரைக்க:
- தேங்காய் - 1/4 கப் துருவியது
- நறுக்கிய தக்காளி - 1
- பொட்டுக்கடலை - 2 ஸ்பூன்
- வர மிளகாய் - 1
- தனியாத் தூள் - 2 ஸ்பூன்
- பட்டை - ஒரு சிறிய துண்டு
- கிராம்பு - 2
- சோம்பு - 1/2 ஸ்பூன்
- சீரகம் - 1/2 ஸ்பூன்
- கசகசா - 1/4 ஸ்பூன்
- இஞ்சி - ஒரு சிறிய துண்டு
- பூண்டு - 3 பல்
செய்முறை:
- முதலில் மிக்சி ஜாரில் அரைக்க வேண்டிய பொருட்களில் தக்காளி தவிர மற்ற அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
- பிறகு தக்காளியைச் சேர்த்து நைசாக அரைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு சேர்த்துத் தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பின்னர் அரைத்த தேங்காய் விழுது மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.
- பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
- தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- இறுதியாக கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
- அவ்வளவுதான் சாம்பார் ரெடி. சூடான இட்லி, தோசையுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications
