Latest Updates
-
மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க… கோடை வெயிலிலும் பணவரவு குறையாம இருக்க ரகசியம்! -
1 வருடம் கழித்து மேஷ ராசிக்கு செல்லும் புதன்: நாளை முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
India Heatwave Alert: இந்தியாவில் வெயில் உச்சத்தில் இருக்கும் டாப் 10 நகரங்கள் என்னென்ன தெரியுமா? -
3/4 கப் வேர்க்கடலையும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா?
சப்பாத்தி, பூரிக்கு சிக்கனை இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க.. சுவை வேற லெவல்-ல இருக்கும்...
Easy Chicken Thokku Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது பூரி செய்ய போகிறீர்களா? அதற்கு சைடு டிஷ்ஷாக சிக்கன் செய்யப் போகிறீர்களா? அப்படியானால் வழக்கமாக செய்வது போன்று சிக்கன் மசாலா செய்யாமல், சற்று புதுவித சுவையைத் தரும் வகையில் அதைக் கொண்டு தொக்கு செய்யுங்கள்.
இந்த சிக்கன் தொக்கு சப்பாத்தி, பூரியுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு சுலபமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு சிக்கன் தொக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* சிக்கன் - 1/2 கிலோ
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
தொக்குவிற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 3
* பிரியாணி இலை - 1
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 20 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 3/4 கப்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் கழுவிய சிக்கனை ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் மஞ்சள் தூள்,
மிளகாய் தூள், மல்லித் தூள், தயிர் மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து நன்கு பிரட்டி 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து 1
நிமிடம் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு 5-7 நிமிடம் கிளறி
விட வேண்டும். இப்படி கிளறிவிடும் போது மசாலா அனைத்தும் சிக்கனில் ஒரே
மாதிரி கோட்டிங் செய்யப்படும்.
* பின்பு தொக்கு சற்று கெட்டியாக இருக்க வேண்டும் என்பதற்காக, அதில்
3/4 கப் நீரை ஊற்றி கிளறி, உப்பு சுவை பார்த்து, மூடி வைத்து, 10
நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்தால் எண்ணெய் பிரிந்து
மிதக்கும். இப்போது அதில் மிளகுத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து
கிளறி இறக்கினால், சுவையான சிக்கன் தொக்கு தயார்.
Image Courtesy: Yummy Tummy Aarthi



Click it and Unblock the Notifications











