Latest Updates
-
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது!
பூரி, சப்பாத்திக்கு சுண்டல் வைச்சு இப்படி ஒரு குழம்பு செய்யுங்க... இனிமே ஹோட்டல் பக்கமே போக மாட்டிங்க...!
Chana Masala Recipe in Tamil: பூரி பெரும்பாலானவர்களுக்கு பிடித்தமான உணவு. ஹோட்டல் போகும் போது சிலர் விரும்பி வாங்கி சாப்பிட ஒரு உணவும் பூரி தான். சும்மா புஸ்ஸுன்னு இருக்க பூரியை எடுத்து நச்சுனு அமுக்கி அதுக்கு நடுவுல பூரி மசாலா கிழங்க வச்சு மேல இன்னொரு பூரியை அமுக்கி கொடுப்பாங்க பாருங்க. இன்னும் அந்த சுவை நுனி நாக்குல இருக்குன்னு சொல்றவங்க ஏராளம்.
இப்போ மக்கள் ஆரோக்கிய கண்ணோட்டத்துல இருக்கறதால பூரியை ஒதுக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஆனாலும் வீட்ல எப்போவாவது செய்து சாப்பிடுவாங்க. அப்படி நீங்களும் எப்போவாவது பூரி செஞ்சா, பூரி கிழங்குக்கு பதிலா இந்த குழம்ப செஞ்சு பாருங்க!

தேவையான பொருட்கள்:
அரைக்க:
- பெரிய வெங்காயம் - 1
- பட்டை - 1 துண்டு (சிறியது)
- ஏலக்காய் - 3
- மிளகு - ½ டீ ஸ்பூன்
- கிராம்பு - 4
- சீரகம் - 1
- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- தக்காளி - 1
தாளிக்க:
- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- பட்டை - 1 துண்டு (சிறியது)
- ஜாதிபத்ரி - 1
- கல்பாசி - சிறிதளவு
- சோம்பு - ¼ டீ ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது - 1 டீ ஸ்பூன்
- கரம் மசாலா - 1 டீ ஸ்பூன்
- மல்லித்தூள் - 1 டீ ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 ½ டீ ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ½ டீ ஸ்பூன்
- சுண்டல் - ஒரு கப்
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி - சிறிதளவு
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- சுண்டலை குறைந்தது 6 மணி நேரமாவது ஊற வைத்து எடுத்து
கொள்ளுங்கள்.
- பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
- தக்காளியை சுத்தமாக கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை
வதக்கவும்.
- அதனுடன் பட்டை, ஏலக்காய், மற்றும் கிராம்பு சேர்த்து நன்றாக
வதக்கவும்.
- அதில் மிளகு மற்றும் சீரகம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- கடைசியாக தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை கிளறவும்.
- பின் அடுப்பை அணைத்து அறை வெப்பநிலைக்கு வரும் வரை ஆற விடவும்.
- பின் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்.
- குக்கரை அடுப்பில் வைத்து காயவிட்டு எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கல்பாசி, சோம்பு, மற்றும் ஜாதிபத்ரி
சேர்த்து பொரிய விடவும்.
- பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக
வதக்கவும்.
- அதனுடன் அரைத்து வைத்த கலவையை சேர்த்து அதனுடன் தேவையான அளவு
தண்ணீர் சேர்க்கவும்.
- அதில் கரம் மசாலா, மல்லித்தூள், மிளகாய்த்தூள், மற்றும் மஞ்சள் தூள்
சேர்க்கவும்.
- ஊற வைத்த சுண்டலை நன்றாக கழுவி குக்கரில் சேர்த்து கொள்ளவும்.
- அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி நான்கு அல்லது
ஐந்து விசில் விட்டு இறக்கவும்.
- பிரஷர் அடங்கியதும் எடுத்து கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை
சேர்த்தால் சுவையான சன்னா மசாலா ரெடி!



Click it and Unblock the Notifications