தீபாவளிக்கு வழக்கமான குலாப் ஜாமுன் செய்யாம இந்த மாதிரி வித்தியாசமா செஞ்சு கொடுங்க... ஒரே நாளில் தீர்ந்துரும்!

Posted By:

Diwali Special Sweet Recipe: தீபாவளி என்றாலே பெரும்பாலான வீடுகளின் முறுக்கிற்கு அடுத்து இடம் பெறுவது குலாப் ஜாமுன்தான். பெரும்பாலும் குலாப் ஜாமுனின் வடிவங்கள் மாறினாலும், சுவையில் மாற்றம் இன்றி ஒரே மாதிரி தான் இருக்கும். தீபாவளிக்கு வீடுகளில் பெரும்பாலும் தட்டை எனும் கார வகைகளையும் செய்திருப்போம். ஆனால், எப்போதாவது தட்டை குலாப் ஜாமுன் செய்திருக்கிறீர்களா? வாயில் வைத்ததும் கரையும் தட்டை குலாப் ஜாமுன் எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Diwali Special Sweet Recipe How To Make Different Gulab Jamun Recipe

தேவையான பொருட்கள்:

- ரவை - ¼ கப்
- மைதா மாவு -¾ கப்
- நெய் - 1 டேபிள் ஸ்பூன்
- தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
- உப்பு - 1 சிட்டிகை
- சமையல் சோடா உப்பு - ¼ டீ ஸ்பூன்
- பால் - 325 மிலி
- எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

பால்கோவா லேயர்:

- பால் - ¾ லிட்டர்
- சர்க்கரை - 3 - 4 டேபிள் ஸ்பூன்
- ஏலக்காய் பொடி - ¼ டீ ஸ்பூன்

சர்க்கரை பாகு:

- சர்க்கரை - 1 கப்
- ஏலக்காய் - 3-4
- குங்குமப்பூ அல்லது ஃபுட் கலர் - சிறிதளவு

செய்முறை:

- ஒரு பாத்திரத்தில் நெய், புளிப்பில்லாத கெட்டியான தயிர், ரவை, மைதா மாவு, உப்பு, மற்றும் சமையல் சோடா உப்பு சேர்த்து கட்டி இல்லாமல் பிசையவும்.
- பின் அதனுடன் காய்ச்சி ஆற வைத்த பாலை சிறிதளவு சேர்த்து பிசையவும்.
- தேவையான அளவு பால் சேர்த்து மாவு கையில் நன்றாக ஒட்டும் பதம் வரும் வரை இளகுவாக பிசைந்துபத்து முதல் பதினைந்து நிமிடங்கள் ஊறவிடவும்.

பால் கோவா லேயர்:

- தண்ணீர் சேர்க்காத கெட்டியான பாலை எடுத்து அகலமான பாத்திரத்தில் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விடவும்.
- பால் சிறிதளவு கெட்டிப்பட துவங்கியதும் அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறவும்.
- சர்க்கரை சேர்த்ததும் கெட்டிப்பதம் இளகி மீண்டும் கெட்டியாக துவங்கும்.
- அப்போது சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து அடுப்பை அணைத்து இறக்கி ஆறவிடவும்.

செய்முறை:

- ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சர்க்கரையை சேர்க்கவும்.
- அதனுடன் அதே அளவு தண்ணீர், இடித்த ஏலக்காய் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
- தேவைப்பட்டால் நிறத்திற்காக அதனுடன் குங்குமப்பூ அல்லது ஃபுட் கலர் சேர்த்து கொள்ளவும்.
- பாகு நன்றாக கொதித்து பிசுபிசுப்பான சிரப் பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
- இப்போது கைகளில் நன்றாக எண்ணையை தடவி ஊற வைத்த மைதா மாவை நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டவும்.
- பின் அந்த உருண்டைகளை எண்ணெய் தடவப்பட்ட பிளாஸ்டிக் பேப்பர் அல்லது எண்ணெய் கவரில் வைத்து தேய்க்கவும்.
- அது மிகவும் மெலிதாகவோ அல்லது தட்டையாகவோ இல்லாத படி தேய்த்து கொள்ளவும்.
- பின் வாணலியை அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானதும் தேய்த்து வைத்தவற்றை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து இருபுறமும் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
- எண்ணெய் வடிந்ததும் வெதுவெதுப்பான சர்க்கரை பாகில் 25 முதல் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- பின் தட்டை ஜாமுனை அகலமான பாத்திரத்தில் வைத்து சிறிதளவு சர்க்கரை பாகு சேர்க்கவும், அதன் மீது நாம் செய்து வைத்த பால்கோவா லேயரை சேர்க்கவும்.
- கடைசியாக உடைத்த நட்ஸ் வகைகளை சேர்த்தால் பார்க்க அழகாகவும், சாப்பிட சுவையாகவும் இருக்கும் தட்டை ஜாமுன் ரெடி!

[ of 5 - Users]
Story first published: Saturday, October 26, 2024, 21:31 [IST]
Desktop Bottom Promotion