Latest Updates
-
நவம்பர் 07, 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு அதிசயங்கள் நடக்கும் நாளாக இருக்குமாம் -
சுக்கிரன் கன்னி ராசிக்குள் நுழைந்திருப்பதால் இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுதாம் - உங்க ராசி என்ன -
தீபாவளிக்கு இந்த பொள்ளாச்சி ஸ்டைல் சிக்கன் பிரியாணியை செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
Skin Care: தக்காளி எப்படி உங்கள் சருமத்தை கண்ணாடி போல ஜொலிக்க வைக்கும் தெரியுமா? -
வார ராசிபலன் (08 November 2026-14 November 2026)- இந்த வாரம் உங்க ராசி எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
தீபாவளி ஸ்பெஷல் கேரளா ஸ்டைல் மனோகரம் முறுக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இனிப்பா சூப்பரா இருக்கும் -
Happy Diwali 2026: இந்தியா தவிர தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் நாடுகள் என்னென்ன தெரியுமா? -
தீபாவளி ஸ்பெஷல் கர்நாடகா ஸ்டைல் நாட்டுக்கோழி குழம்பு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - செமயா இருக்கும் -
இந்தியாவின் 'மாந்திரீக பூமி' என்று அழைக்கப்படும் கிராமம் எது தெரியுமா? எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
கோதுமை ரவா இட்லியும், தக்காளி கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
தீபாவளி ஸ்பெஷல் பாய்வீட்டு மட்டன் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Diwali Special Mutton Biryani Recipe In Tamil: தீபாவளிக்கு பெரும்பாலானோரது வீட்டில் மணமணக்க மட்டனை சமைத்து சாப்பிடும் வழக்கம் இருக்கும். அதுவும் காலையில் இட்லி மட்டன் குழம்பு என்று ஆரம்பித்து, மதியம் பிரியாணி செய்து, தீபாவளி பட்டாசுடன் மட்டுமின்றி, இப்படி வாய்க்கு ருசியாக சமைத்து சாப்பிட்டும் கொண்டாடுவார்கள். அப்படி நீங்கள் தீபாவளிக்கு மட்டன் பிரியாணி செய்ய போகிறீர்கள் என்றால், பாய் வீட்டு மட்டன் பிரியாணியை செய்யுங்கள். இந்த மட்டன் பிரியாணி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, ஆளை மயக்கும் வகையில் நல்ல மணத்துடனும், சுவையுடனும் இருக்கும்.

உங்களுக்கு இந்த பாய் வீட்டு மட்டன் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாய் வீட்டு மட்டன் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசுமதி அரிசி - 1/2 கிலோ அல்லது 1 டம்ளர் (1/2 மணிநேரம் ஊற வைத்தது)
வேக வைப்பதற்கு..
* மட்டன் - 3/4 கிலோ
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 2 கப்
பிரியாணி மசாலாவிற்கு...
* பட்டை - 2 இன்ச்
* கிராம்பு - 6
* ஏலக்காய் - 4
* ஜாதிக்காய் - சிறிது
* கல்பாசி - சிறிது
பிரியாணி தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 இன்ச்
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 4
* பெரிய வெங்காயம் - 3 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 4 (கீறியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* வேக வைத்த மட்டன்
* பெரிய தக்காளி - 3 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* அரைத்த பிரியாணி மசாலா
* கெட்டி தயிர் - 1/2 கப்
* புதினா - 1 கைப்பிடி
* கொத்தமல்லி - 1/2 கைப்பிடி
* தண்ணீர் - 3 டம்ளர்
* ஊற வைத்த பாசுமதி அரிசி
* எலுமிச்சை - 1
செய்முறை:
* முதலில் பாசுமதி அரிசியை நீரில் 2 முறை கழுவி, சுத்தமான நீரை
ஊற்றி, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரில் மட்டனை கழுவி எழுத்துக் கொண்டு, அத்துடன் மஞ்சள்
தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், சுவைக்கேற்ப உப்பு மற்றும் 2 கப் நீரை
ஊற்றி கலந்து, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய்,
கல்பாசி ஆகியவற்றை சேர்த்து, நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு பிரியாணி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்
மற்றும் நெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து
பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து,
பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் வேக வைத்த மட்டனை மட்டும் சேர்த்து, நன்கு 2 நிமிடம்
கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி,
தக்காளி மென்மையாகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், அரைத்த பிரியாணி மசாலா சேர்த்து நன்கு
பச்சை வாசனை போக கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் கெட்டி தயிரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் புதினா, கொத்தமல்லியை சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* அடுத்து அதில் 3 டம்ளர் நீரை ஊற்ற வேண்டும். அந்த 3 டம்ளரில் மட்டன்
வேக வைத்த நீரையும் சேர்த்துக் கொண்டு, நன்கு கொதிக்க ஆரம்பித்ததும்,
பாசுமதி அரிசியை நீரை வடிகட்டிவிட்டு சேர்த்து கிளறி, உப்பு சுவை
பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின் அதில் 1 எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து கிளறி, மூடி வைத்து
குறைவான தீயில் 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து பிரியாணியை கிளறி விட்டு, பின்
அந்த பிரியாணியை தம் போட வேண்டும். அதற்கு தோசைக்கல்லை அடுப்பில்
வைத்து, அதன் மேல் இந்த பிரியாணி பாத்திரத்தை வைத்து மூடி, அதன் மேல்
ஒரு கனமான இடி கல்லை வைத்து, 10 நிமிடம் குறைவான தீயில் தம் போட்டு
இறக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து பிரியாணியை கிளறினால், சுவையான
பாய் வீட்டு மட்டன் பிரியாணி தயார்.



Click it and Unblock the Notifications
