Latest Updates
-
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது!
1 கப் பொட்டுக்கடலை இருந்தா.. இந்த ஸ்வீட்டை 10 நிமிடத்தில் செய்யுங்க.. வாயில் வெச்சதும் கரையும்..
Diwali Special Pottukadalai Burfi Recipe In Tamil: தீபாவளிக்கு இன்னும் உங்கள் வீட்டில் பலகாரம் செய்ய தொடங்கவில்லையா? பலகாரம் செய்யும் அளவில் உங்களுக்கு நேரம் எதுவும் இல்லையா? கவலைப்படாதீர்கள். 1 கப் பொட்டுக்கடலை இருந்தால், அதைக் கொண்டு 10 நிமிடத்தில் சூப்பரான ஸ்வீட் செய்லாம். அது தான் பொட்டுக்கடலை பர்பி.
இந்த பர்பி வாயில் வைத்ததும் கரையும் வரை, மிகவும் மென்மையாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். குறிப்பாக இந்த ஸ்வீட் வேலைக்கு செல்பவர்களுக்கு ஏற்றவாறு இருக்கும்.

உங்களுக்கு பொட்டுக்கடலை பர்பியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொட்டுக்கடலை பர்பி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பொட்டுக்கடலை - 1 கப்
* ஏலக்காய் - 4
* எண்ணெய் - 1 கப்
* நெய் - 4 டேபிள் ஸ்பூன்
* சர்க்கரை - 1 கப்
* உப்பு - 2 சிட்டிகை
* தண்ணீர் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலை மற்றும் ஏலக்காயை சேர்த்து
நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் அரைத்த பொட்டுக்கடலை பவுடரை எடுத்து,
அத்துடன் 1/1 கப் எண்ணெய் ஊற்றி கட்டிகளின்றி கலந்து கொள்ள
வேண்டும்.
* பின்பு மீதமுள்ள 1/2 கப் எண்ணெயுடன், 4 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி
கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சர்க்கரை சேர்த்து,
அத்துடன் 2 சிட்டிகை உப்பு மற்றும் 1/2 கப் நீரை ஊற்றி, சர்க்கரையை
கரைக்க வேண்டும்.
* சர்க்கரை நன்கு கரைந்து ஒரு கம்பி பதத்திற்கு வந்ததும், அதில்
கரைத்து வைத்துள்ள பொட்டுக்கடலையை ஊற்றி தொடர்ந்து கிளறி விட
வேண்டும்.
* கலவையானது சற்று கெட்டியாகத் தொடங்கியதும், நெய் கலந்து வைத்துள்ள
எண்ணெயை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
* கலவை நன்கு கெட்டியாகி, எண்ணெய் பிரிந்து வரத் தொடங்கினால், நெய்
தடவிய ட்ரேயில் ஊற்றி சமப்படுத்தி நன்கு குளிர வைக்க வேண்டும்.
* பர்பி நன்கு குளிர்ந்ததும், அதை ஒரு தட்டில் கவிழ்த்து தட்டி,
கத்தியால் தேவையான வடிவத்தில் துண்டுகளாக்கினால், சுவையான
பொட்டுக்கடலை பர்பி தயார்.



Click it and Unblock the Notifications
