Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
1/2 கப் பொட்டுக்கடலையும், 2 கப் அரிசி மாவும் வெச்சு.. தீபாவளிக்கு இந்த ஸ்பெஷல் பலகாரத்தை ட்ரை பண்ணுங்க..
Diwali Special Palakad Thattai Recipe In Tamil: தீபாவளிக்கு உங்கள் வீட்டில் பலகாரம் செய்வீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான பலகாரம் செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான பலகாரம் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் பாலக்காடு தட்டையை செய்யுங்கள்.
இந்த தட்டை செய்ய 1/2 கப் பொட்டுக்கடலையும், 2 கப் அரிசி மாவும் இருந்தால் போதும். 1 வாரம் வரை வைத்து சாப்பிடும் அளவில் அருமையான சுவையில் மொறுமொறுப்பான தட்டையை செய்யலாம். இந்த தட்டை நிச்சயம் உங்கள் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு பாலக்காடு தட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாலக்காடு தட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பொட்டுக்கடலை - 1/2 கப்
* இஞ்சி - 1/2 இன்ச்
* பச்சை மிளகாய் - 10
* பூண்டு - 5 பல்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* அரிசி மாவு - 2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1/4 கப்
* கறிவேப்பிலை - சிறிது
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் கடலைப் பருப்பை நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலையை சேர்த்து நன்கு மென்மையாக
அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த பொட்டுக்கடலை பொடியை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள
வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு, சீரகம்
சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்ததை பொட்டுக்கடலை பொடியுடன் சேர்த்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து அதில் 2 கப் அரிசி மாவு சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி,
கைகளால் முதலில் கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயை நன்கு சூடேற்றி ஊற்றி
கரண்டியால் கிளறி விட வேண்டும்.
* அதன் பின் கைகளால் மாவை கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் ஊற வைத்த கடலைப் பருப்பை நீரில் 2 முறை கழுவி
சேர்த்து, அத்துடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலையை சேர்க்க
வேண்டும்.
* பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, சப்பாத்தி மாவு
பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கையில் எண்ணெய் தடவி, பின் பிசைந்த
மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி, நீள்வட்ட வடிவில் தட்டி,
எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பாலக்காடு
தட்டை தயார்.



Click it and Unblock the Notifications