Latest Updates
-
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது!
தீபாவளி அன்று குலையாம குக்கரில் மட்டன் பிரியாணி செய்யணுமா? இந்த 3 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க போதும்..
Diwali Special Mutton Biryani In Tamil: தீபாவளி பண்டிகையை அனைவரும் கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருப்பீர்கள். மதியம் உங்கள் வீட்டில் மட்டன் வாங்கியிருந்தால், அந்த மட்டனைக் கொண்டு 1/2 மணிநேரத்தில் அருமையான மட்டன் பிரியாணியை செய்யுங்கள். அதுவும் குக்கரிலேயே குலையாத மட்டன் பிரியாணியை செய்யலாம். அதற்கு ஒருசில டிப்ஸ்களை மனதில் கொண்டு செய்தாலே போதும். பிரியாணி குலையாமல் அருமையாக வரும்.
உங்களுக்கு குலையாமல் குக்கரில் மட்டன் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குக்கர் மட்டன் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* சீரக சம்பா அரிசி - 2 டம்ளர் அல்லது 1/2 கிலோ
* மட்டன் - 500 கிராம்
மசாலா அரைப்பதற்கு...
* பட்டை - 3 துண்டு
* கிராம்பு - 5-6
* கல்பாசி - சிறிது
* ஏலக்காய் - 5
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மல்லி - 2 டீஸ்பூன்
* பூண்டு - 1 கைப்பிடி
* இஞ்சி - 2 இன்ச்
* சின்ன வெங்காயம் - 15
* பச்சை மிளகாய் - 3
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* புதினா - 1 கைப்பிடி
பிரியாணிக்கு...
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 4
* அன்னாசிப்பூ - 1
* பிரியாணி இலை - 2
* கல்பாசி - சிறிது
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் (காரத்திற்கு ஏற்ப)
* தண்ணீர் - 1/2 கப் + 4 கப்
* எலுமிச்சை - பாதி பழம்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* புதினா - 1 கைப்பிடி
செய்முறை:
* முதலில் சீரக சம்பா அரிசியை நீரில் 2 முறை கழுவி விட்டு, பின்
நீரை ஊற்றி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின் மட்டனை கழுவி விட்டு
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் பிரியாணிக்கு ஸ்பெஷல் மசாலாவை அரைக்க வேண்டும். அதற்கு
மிக்சர் ஜாரில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, சோம்பு, மல்லி,
ஆகியவற்றை சேர்த்து முதலில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பூண்டு, இஞ்சி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய்,
கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை சேர்த்து, நீர் விடாமல் நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ,, பிரியாணி இலை,
கல்பாசி சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, அதன் பச்சை
வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து, அத்துடன்
மஞ்சள் தூளையும் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து 2 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின் தயிர் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* அதன் பின் அதில் 1/2 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி மிதமான
தீயில் வைத்து 5-6 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத்
திறந்து கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் ஒரு 2 1/2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க
வைக்க வேண்டும்.
* நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரிசியை கழுவி சேர்த்து, உப்பு
சுவை பார்த்து வேணடுமானால் தேவையான அளவு உப்பையும் சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* பின்பு அதில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கிளறி, குக்கரை மூடி உடனே
விசில் போடாமல், 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.
* பின் குக்கர் மூடியைத் திறந்து, நன்கு கிளறி விட்டு, பின் அதில் 1
டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, கொத்தமல்லி மற்றும் புதினாவைத் தூவி,
குக்கரை மூடி குறைவான தீயில் வைத்து, விசில் போட்டு 10 நிமிடம் வேக
வைத்து இறக்கி, 10 நிமிடம் கழித்து குக்கரைத் திறந்தால், சுவையான
மட்டன் பிரியாணி தயார்.
குறிப்பு: 1 கப் சீரக சம்பா அரிசிக்கு 2 கப் நீர் ஊற்ற வேண்டும். எனவே இதை நினைவில் கொண்டு, அதற்கேற்ப பிரியாணிக்கு நீரை ஊற்றுங்கள்.



Click it and Unblock the Notifications





