Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
1 கப் கடலைப்பருப்பை வெச்சு.. தீபாவளிக்கு சூப்பர் லட்டு செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க..
Diwali Special Laddu Recipe In Tamil: தீபாவளி பண்டிகை வரப்போகிறது. அனைவரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீட்டில் பலவிதமான பலகாரங்களை செய்ய திட்டமிட்டுக் கொண்டிருப்பார்கள். உங்களின் பலக்கார பட்டியலில் லட்டுவும் இடம் பெற்றுள்ளதா?
இதுவரை லட்டு செய்வதாக இருந்தால், பூந்தியை எண்ணெயில் பொரித்து தான் செய்திருப்பீர்கள். ஆனால் அப்படி எண்ணெயில் பொரிக்காமலேயே அருமையாக லட்டு செய்யலாம் தெரியுமா? இப்படி ஒருமுறை லட்டு செய்ய தெரிந்து வைத்துக் கொண்டால், பின் எந்த பண்டிகை வந்தாலும் நொடியில் லட்டு செய்துவிடுவீர்கள்.

உங்களுக்கு தீபாவளி ஸ்பெஷலாக எண்ணெயில் பொரிக்காமல் லட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அந்த லட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலைப் பருப்பு - 1 கப் (2 மணிநேரம் நீரில் ஊற வைத்தது)
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
* சர்க்கரை - 1 1/4 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* ஏலக்காய் - 3
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* தண்ணீர் - 1 1/2 கப்
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 15
செய்முறை:
* முதலில் கடலைப்பருப்பை நீரில் 2 முறை கழுவி, பின் நீரை ஊற்றி, 2
மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 2 மணிநேரம் கழித்து, மிக்சர் ஜாரில் ஊற வைத்த கடலைப் பருப்பை
சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளிப்
போட்டு, மொறுமொறுவென்று பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு பெரிய மிக்சர் ஜாரில் பொரித்ததை சேர்த்து, கொரகொரவென்று
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/4 கப் சர்க்கரை, 1
சிட்டிகை உப்பு, 3 ஏலக்காய், மஞ்சள் தூள் சேர்த்து, 1 1/2 கப் நீரை
ஊற்றி, சர்க்கரை கரைந்து, ஒரு கம்பி பதத்திற்கு வந்ததும், அரைத்ததை
சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கி, கை பொறுக்கும் சூட்டிற்கு வரும் வரை
குளிர வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய்
ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து ப்ரை செய்து, குளிர வைத்துள்ள
கலவையுடன் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* கலவையானது வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும், கொஞ்சம் கொஞ்சமாக
எடுத்து உருட்டி லட்டு போன்று பிடித்து வைத்தால், சுவையான லட்டு
தயார்.



Click it and Unblock the Notifications