Latest Updates
-
தீபாவளி ஸ்பெஷல் காரசாரமான மட்டன் குழம்பு ரெசிபி - இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - தீபாவளியே ஸ்பெஷலாகிரும் -
தீபாவளி பலகாரங்களால் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த வழிகளை ஃபாலோ பண்ணுங்க.. -
தாஜ் மஹால் கட்டப்பட்ட நிலத்தின் உண்மையான உரிமையாளர் யார் தெரியுமா? அவர் ஏன் நிலத்தை கொடுத்தார் தெரியுமா? -
தந்தேராஸில் உருவாகியுள்ள 2 ராஜயோகங்கள்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்! -
பச்சை பயறு தேங்காய்ப்பால் அரிசி கஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
நவம்பர் 06, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த துயரமான நாளாக இருக்குமாம் -
தீபாவளிக்கு பின் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
தீபாவளிக்கு பின் நிகழும் சுக்கிர பெயர்ச்சியால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தீபாவளிக்கு இப்படி மசாலா அரைச்சு மட்டன் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
1/4 கப் இஞ்சியும், தேங்காயும் வைச்சு இந்த வித்தியாசமான சட்னி அரைச்சு பாருங்க -இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும்
தீபாவளி ஸ்பெஷல் பாய் வீட்டு ஆட்டுக்கால் பாயா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
Diwali Special Aatu kaal Paya Recipe In Tamil: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரும்பாலான வீட்டில் காலையில் இட்லியும், மட்டன் குழம்பும் தான் காலை டிபனாக இருக்கும். இந்த ஆண்டு தீபாவளிக்கு உங்கள் வீட்டில் உள்ளோருக்கு இட்லிக்கு வித்தியாசமான சைடு டிஷ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் ஆட்டுக்கால் வாங்கி வந்து பாயாவை செய்து கொடுங்கள். அதுவும் பாய் வீடுகளில் செய்யக்கூடிய சுவையில் ஆட்டுக்கால் பாயாவை செய்து கொடுங்கள். இப்படி செய்து கொடுக்கும் போது, வீட்டில் உள்ளோர் அனைவரும் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு இந்த ஆட்டுக்கால் பாயாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆட்டுக்கால் பாயா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ஆட்டுக்கால் - 1 செட்
* சுடுநீர் - தேவையான அளவு
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
வேக வைப்பதற்கு...
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
அரைப்பதற்கு...
* தேங்காய் - 1/4 மூடி
* முந்திரி - 15 (சுடுநீரில் ஊற வைத்தது)
* கசகசா - 1 டீஸ்பூன் (சுடுநீரில் ஊற வைத்தது)
* பச்சை மிளகாய் - 4
* சோம்பு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 3 துண்டு
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 4
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* புதினா - 1 கைப்பிடி
* கொத்தமல்லி - சிறிது
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* வேக வைத்த ஆட்டுக்கால்
* அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஆட்டுக்காலை கைப்பொறுக்கும் சூட்டில் உள்ள நீரில் போட்டு
15 நிமிடம் ஊற வைத்து, பின் கத்தியால் ஆட்டுக்கால் மேல் உள்ள கருப்பை
சுரண்டி எடுத்து விட்டு, சுத்தமான நீரால் ஒருமுறை கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி 15 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* பின்பு குக்கரில் கழுவிய ஆட்டுக்காலை எடுத்துக் கொண்டு, அத்துடன்
பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, மஞ்சள் தூள்,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, ஆட்டுக்கால் மூழ்கும் அளவில் நீரை ஊற்றி
கலந்து, குக்கரை மூடி 10-12 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் தேங்காய், ஊற வைத்த முந்திரி, கசகசா, பச்சை
மிளகாய், சோம்பு ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு ஆகியவற்றை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட்
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரை
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கொத்தமல்லியை சேர்த்து வதக்கி, அத்துடன் மிளகுத்
தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் வேக வைத்த ஆட்டுக்காலை அப்படியே நீருடன் சேர்த்து,
பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து, சிறிது நீரை ஊற்றி
கிளறி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவினால்,
சுவையான ஆட்டுக்கால் பாயா தயார்.



Click it and Unblock the Notifications
