Latest Updates
-
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
தாபா ஸ்டைல் முட்டை கறி ரெசிபி... முட்டையை ஒரே மாதிரி செய்யாம இந்த மாதிரி முட்டை கிரேவி செய்யுங்க...!
தினமும் சமைப்பது என்பது மிகவும் சவாலான மற்றும் போரடிக்கும் விஷயமாகும், அதிலும் ஒரே மாதிரியாக சமைப்பது என்பது நாளடைவிலில் சலிப்பை ஏற்படுத்தும். புரட்டாசி கிட்டத்தட்ட முடிந்து விட்டது, இனி பெரும்பாலான மக்கள் தங்களின் அசைவ உணவு ஆசையைத் தீர்த்துக் கொள்ள விரும்புவார்கள். முதலில் முட்டையிலிருந்து தொடங்குவது என்பது எளிதானது மற்றும் பட்ஜெட்டிற்குள் வரக்கூடியது.
முட்டை ரெசிபி என்றதும் வழக்கம்போல ஆம்லெட், பொரியல் அல்லது முட்டைக்குழம்பு என வைக்காமல் புதிதாக ஏதாவது ருசித்து சாப்பிட இதுவே சரியான நேரம். அதற்கு உதவும் வகையில் தாபா கடைகளில் செய்யும் முட்டைக் குருமாவை எப்படி வீட்டிலேயே செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். வேகவைத்த முட்டையில் செய்யப்படும் இந்த ரெசிபி விரைவில் செய்யக்கூடியது மற்றும் இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு சிறந்த காம்பினேஷனாக இருக்கும்.

தேவையானப் பொருட்கள்:
- வேகவைத்த முட்டை - 4
- பெரிய வெங்காயம் - 2
- தக்காளி - 2
- இஞ்சி - ஒரு துண்டு
- பூண்டு - 10 பல்
- பச்சை மிளகாய் - 2
- இலவங்கப்பட்டை - 1
- கிராம்பு - 4
- ஏலக்காய் - 2
- பிரியாணி இலை - 1
- சீரகம் - 1 ஸ்பூன்
- தயிர் - 2ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
- மல்லித்தூள் - 1 ஸ்பூன்
- காஷ்மீர் மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
- கரம் மசாலா - 1 ஸ்பூன்
- சீரகத் தூள் - அரை ஸ்பூன்
- மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
- கஸ்தூரி மேத்தி - சிறிதளவு
- கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
- வெங்காயம், இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாயை சிறிது தண்ணீர்
விட்டு நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- அடி கனமான பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி மிதமாக சூடாக்கவும்.
அதன்பின் சீரகம் சேர்த்து வதக்கவும்.
- பிரியாணி இலை, இலவங்கப்பட்டை, ஏலக்காய், மிளகுத்தூள் மற்றும்
கிராம்பு என அனைத்து மசாலாப் பொருட்களையும் எண்ணெயில் சேர்த்து
வதக்கவும்.
- அவை வதங்கியவுடன், வெங்காய விழுதைச் சேர்க்கவும். வெங்காய விழுதை
மிதமான தீயில் வேகவைத்து, அடிக்கடி கிளறி, அது பொன்னிறமாக மாறும் வரை
வதக்கவும். எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் சீரக
தூள் சேர்க்கவும். அவற்றின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- தக்காளியை அரைத்து அதில் சேர்த்து, அதன்பின் உப்பு போட்டு
2-3நிமிடங்கள் வதக்கவும்.
- அதன்பின் தயிரை சேர்த்து நன்கு வதக்கவும்.
- கரம் மசாலா மற்றும் கஸ்தூரி மேத்தி சேர்க்கவும்.அதன்பின் 1 ½ கப்
தண்ணீர் சேர்த்து கலக்கவும். அதன்பின் பாத்திரத்தை மூடி வைத்து 8-10
நிமிடங்கள் அல்லது எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
- அதன்பின் பச்சை மிளகாயை கீறி, சிறிது கொத்தமல்லி இலைகள் சேர்த்து
கிளறவும்.
- வேகவைத்த முட்டைகளை எடுத்துக் கொள்ளவும், ஒரு வாணலியில் எண்ணெய்
சேர்த்து சூடாக்கவும். தீயை குறைத்து மிளகாய் தூள் மற்றும் மஞ்சள்
தூள் சேர்க்கவும்.
- வேகவைத்த முட்டைகளைச் அதில் சேர்த்து, தொடர்ந்து கிளறிக்கொண்டே 2
நிமிடம் மிதமான தீயில் கிளறவும்.
- முட்டையின் மேற்பரப்பின் நிறம் மாறியவுடன் அடுப்பை அணைக்கவும்.
- இப்போது இந்த வறுத்த முட்டைகளை கிரேவியில் போட்டு 2 நிமிடம் கொதிக்க
வைக்கவும்.
- இப்போது நறுக்கிய கொத்தமல்லி இலைகளை இதில் போட்டு இறக்கினால்
சுவையான தாபா ஸ்டைல் முட்டை கறி ரெடி.
- இதனை இட்லி , தோசை, சப்பாத்தி மற்றும் புரோட்டாவுடன் வைத்து
சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications