சிக்கன் வாங்குனா இந்த மாதிரி பாம்பே ஸ்டைல் தாவூத் சிக்கன் செய்யுங்க... பைவ் ஸ்டார் ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும்..

Posted By:

Dawood Chicken Recipe in Tamil: ஞாயிற்று கிழமை வந்தால் பெரும்பாலான வீடுகளில் சிக்கன், மட்டன், மற்றும் மீன் போன்ற அசைவ உணவுகள் இடம்பெற்று விடும். மட்டன் விலை அதிகமாக இருப்பதால் அதற்கு மாற்றாக பலரும் சிக்கன் செய்வார்கள். பல வீடுகளில் இரண்டுமே இருக்கும்.

சிக்கன் கிரேவி, சிக்கன் ஃப்ரை என செய்தாலும் சில நேரத்தில் அதுவும் அலுப்பு தட்டிவிடும். அலுப்பை தட்டி விட்டு அருமையான சுவையில் சிக்கன் செய்ய இந்த பாம்பே ஸ்டைல் தாவூத் சிக்கன் செய்து பாருங்க. இந்த சூப்பரான தாவூத் சிக்கனை எப்படி செய்யுறதனு இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Dawood Chicken Recipe How to Prepare Dawood Chicken

தேவையான பொருட்கள்:

- சிக்கன் - ½ கிலோ
- இஞ்சி - சிறிய துண்டு (2 இன்ச் அளவு)
- பூண்டு - 15 பல்
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- கரம் மசாலா - 1 டீ ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ¼ டீ ஸ்பூன்
- தக்காளி - 1
- பச்சை மிளகாய் - 2
- எலுமிச்சை பழம் - ½ பழம்
- உப்பு - தேவையான அளவு
- வெண்ணெய் - தேவையான அளவு
- கஸ்தூரி மேத்தி - சிறிதளவு

அரைக்க:

- வரமிளகாய் - 3
- கொத்தமல்லி விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
- மிளகு - 1 டீ ஸ்பூன்

செய்முறை:

- முதலில் சிக்கன் துண்டுகளை மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து சுத்தமாக அலசி எடுத்து வைக்கவும்.

- இஞ்சியை மண் இல்லாமல் அலசி தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

- பூண்டு தோலை உரித்து சுத்தம் செய்து வைக்கவும்.

- நன்றாக பழுத்த சிவப்பு தக்காளியை தண்ணீரில் சுத்தமாக கழுவி பிபி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

- பச்சைமிளகாயை இரண்டு இரண்டாக கீறி வைக்கவும். எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து வைக்கவும்.

- ஈரம் இல்லாமல் உலர்ந்த ஒரு மிக்ஸி ஜாரில் வரமிளகாய், கொத்தமல்லி விதைகள் மற்றும் மிளகு சேர்க்கவும்.

- அவற்றை கொரகொரப்பாக அரைத்து வேறு பாத்திரத்திற்கு மாற்றி வைக்கவும்.

- பின் அதில் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து விழுதாக அரைக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.

- இப்போது அரைத்த இஞ்சி பூண்டு விழுதை சிக்கன் உடன் சேர்த்து பிரட்டவும்.

- பின் அதனுடன் கொரகொரப்பாக அரைத்து வைத்த பொடியையும் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

- அதனுடன் மிளகாய் தூள், கரம் மசாலா, மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்துவிடவும்.

- கடைசியாக பிழிந்து வைத்த எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து நன்கு வைக்கவும்.

- இதை குறைந்தது அரை மணி நேரத்திற்கு ஊற வைத்து விடுங்கள்.

- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணை சேர்த்து உருகவிடவும்.

- பின் அதில் நாம் ஊற வைத்த சிக்கன் சேர்த்து 2 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

- தண்ணீர் சேர்க்க தேவையில்லை. சிக்கனில் இருந்து வரும் தண்ணீரே போதுமானதாக இருக்கும்.

- அதனுடன் நறுக்கிய தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கிளறி வேக விடவும்.

- சிக்கன் தண்ணீர் இல்லாமல் நன்கு வெந்ததும் கஸ்தூரி மேத்தி இலைகளை சேர்த்து அடுப்பை அணைத்தால் சுவையான தாவூத் சிக்கன் ரெடி!

[ of 5 - Users]
Story first published: Saturday, May 24, 2025, 20:55 [IST]
Desktop Bottom Promotion