Latest Updates
-
3 முட்டை இருந்தா இந்த கையேந்தி பவன் சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு காரசாரமா சூப்பரா இருக்கும் -
World Mental Health Day 2026: ரீல்ஸ் பார்ப்பது மனநிலையை எப்படிப் பாதிக்கிறது? விளக்கும் மனநல மருத்துவர்! -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும்
வெள்ளரிக்காய் வெச்சு கூட்டு செஞ்சுருக்கீங்களா? இல்லன்னா இன்னைக்கு ட்ரை பண்ணுங்க..
Cucumber Kootu: இதுவரை நீங்கள் வெள்ளரிக்காயை அப்படியே மட்டும் தான் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அந்த வெள்ளரிக்காயை சமைத்து சாப்பிட்டிருக்கிறீர்களா? என்ன வெள்ளரிக்காயை சமைத்து சாப்பிடலாமா என்று பலரும் கேட்கலாம். ஆம், உண்மையிலேயே வெள்ளரிக்காயை சமைத்து சாப்பிடலாம்.
அதுவும் வெள்ளரிக்காயைக் கொண்டு கூட்டு செய்தால், அதை சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடனும் சேர்த்து சாப்பிடலாம். இந்த வெள்ளரிக்காய் கூட்டு செய்வது மிகவும் சுலபம். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாகவும் இருக்கும்.

உங்களுக்கு வெள்ளரிக்காய் கூட்டு எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெள்ளரிக்காய் கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெள்ளரிக்காய் - 250 கிராம்
* கடலைப் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 1
* சீரகம் - 1 டீஸ்பூன்
* அரிசி - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் கடலைப்பருப்பை நீரில் 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதேப் போல் அரிசியையும் நீரில் 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் வெள்ளரிக்காயின் தோல் மற்றும் விதைகளை நீக்கிவிட்டு, அதை
பொடியாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியில் கடலைப்பருப்பை கழுவிப் போட்டு, அதில் நீரை
ஊற்றி அடுப்பில் வைத்து, கடலைப் பருப்பை 90 சதவீதம் வேக வைக்க
வேண்டும்.
* அதே சமயம் ஒரு மிக்சர் ஜாரில் ஊற வைத்த அரிசியுடன், துருவிய
தேங்காய், சீரகம், வரமிளகாய் மற்றும் சீரகத்தைப் போட்டு நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* கடலைப்பருப்பு வெந்ததும், அதில் வெள்ளரிக்காயை சேர்த்து, 1/2 கப்
நீரை ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
வெள்ளரிக்காயை மென்மையாக வேக வைக்க வேண்டும்.
* வெள்ளரிக்காய் நன்கு வெந்ததும், அதில் அரைத்த தேங்காயை சேர்த்து
கிளறி, வேண்டுமானால் சிறிது நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து இறக்க
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும்
கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, கூட்டுடன் சேர்த்து கிளறினால்,
சுவையான வெள்ளரிக்காய் கூட்டு தயார்.
Image Courtesy: subbuskitchen



Click it and Unblock the Notifications
